fontsize: 60% 70% 80% 90%

ரயில்வே அருள்மிகு முனீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா

ரயில்வே அருள்மிகு முனீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா வரும் 21.2.2010 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று காலை 7.30 மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் அருள்மிகு விநாயகர் வழிபாடு, யந்திர பூசை, { முனீஸ்வரர் மூலமந்திர லட்ச ஜெபம் நடைபெறும்.
நாளை வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் அருள்மிகு மகா கணபதி ஹோமம், வேதபாராயணம், மாலை 6.30 மணி முதல் அருள்மிகு நவக்கிரக ஹோமம், யந்திர ஸ்தாபனம், வாஸ்து சாந்தி, திசா பலி, வேத பாராயணம் நடைபெறும்.
20.2.2010 சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் அஸ்திர ஹோமம், கோ பூசை, வேத பாராயணம், மாலை 4.30 முதல் யாக சாலை பூசை, கால ஹோமம், மகாலட்சுமி பூசை, தைலாப்பியங்கம், வேதபாராயணம் நடைபெறும்.
21.2.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு யாகசாலை பூசை, 10.15 கடம் புறப்பாடு, 10.35க்கு மகா குடமுழுக்கு விழா நடைபெறும். மாலை 5.30க்கு சிறப்பு அபிஷேகம், பூசைகள், வேத பாராயணம் நடைபெறும்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838