fontsize: 60% 70% 80% 90%

வயது குறைந்தவருடன் பாலியல் உறவு அதிகரிப்பு

பதினான்கு வயதுக்கும் குறைந்த சிறுமிகளுடன் உடலுறவு கொண்ட குற்றச் செயல்கள் கடந்த ஆண்டு
36 விழுக்காடு உயர்ந்துள்ளன.
2008ம் ஆண்டில் இது போன்ற 61 வழக்குகள் பதிவாயின. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 83க்கு உயர்ந்தது என்று போலிஸ் அறிக்கை கூறியது.
இந்த குற்றச் செயல்களைப் புரிந்த ஆடவர்களில் பெருமான்மையினர் அந்தப் பெண்களுக்குத் தெரிந்தவர்களாகவே இருந்தனர் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
போலிசார் நேற்று அறிவித்த ஆண்டு குற்ற அறிக்கையில் இந்த விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
பதினான்கு வயதுக்கும் குறைந்த சிறுமிகளின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டாலும் அது சட்டப்படி குற்றம்.
அதிகரித்து வரும் இந்த குற்றச் செயலைச் சமாளிக்க பயிற்சி வகுப்புகள், பட்டறைகள், விழிப்புணர்வுப் பேச்சுகள் ஆகியவற்றைப் போலிசார் அதிகரிக்க உள்ளனர்.
இந்தக் குற்றத்தைத் தவிர்க்கும் நடவடிக்கைகளையும் போலிசார் தீவிரப்படுத்தவுள்ளனர்.
பதின்ம வயது உடலுறவால் ஏற்படும் சமூக, சட்டரீதியான விளைவுகளைப் பற்றி மேலும் அதிக அளவில் விழுப்புணர்ச்சி ஏற்படுத்த சமூக சேவை அமைப்புகள் காவல் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் சமூகத்தையும் பெற்றோரையும் பள்ளிகளையும் ஊடகங்களையும் பதின்ம வயது உடலுறவின் பாதிப்புகள் பற்றி இளையர்களுக்குப் அறிவுறுத்த கேட்டுக்கொண்டது.
குடும்பத்தினரும் தங்களது பதின்ம வயது பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துமாறும் போலிசார் அறிவுறுத்தினர்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838