கடந்த ஆண்டு அதிகரித்த சில்லறைத் திருட்டுக் குற்றங்களில் சைக்கிள் திருட்டு, கடைகளில் திருட்டு, பொது இடத்தில் திருட்டுச் செயல்கள் முதன்மை வகிக்கின்றன.
பொது இடங்களில், அதுவும் முறையான பூட்டுக்கள் போடாததால் சைக்கிள் அதிகம் களவு போகின்றன என்று போலிசார் கூறினர்.
முறையான பூட்டு அல்லது பாதுகாப்பு வசதிகள் இல்லாததே, வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரித்ததன் காரணம் என்றும் போலிசார் கூறினர்.
சுலபமாக வெட்டக் கூடிய பூட்டுகளைப் பயன்படுத்துவதால் இந்த சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என போலிசார் கேட்டுக்கொண்டனர்.
வீட்டில் இல்லாத போது கதவுகள், சன்னல்களைப் பூட்டுதல், நகைகள் மற்றும் பணத்தை வங்கிகளில் வைத்தல், வீட்டுச் சாவியைக் கதவுக்கு வெளியே வைக்காமல் இருத்தல் போன்ற பல எச்சரிக்கை நடவடிக்கைகளைப் போலிசார் முன்வைத்தனர்.
அக்கம்பக்கத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் செயல்படும் நபர்களைக் கண்டால் உடனே காவல் துறையிடம் தகவல் கொடுக்கும்படியும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.