டக்கோட்டா கிரஸண்டில் பல சைக்கிள் திருட்டு தொடர்பாக ஓர் ஆடவரையும் ஒரு பெண்ணையும் போலிசார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேடி வருகின்றனர்.
30 வயதுகளில் உள்ள ஆடவர் சுமார் 1.65 மீட்டர் உயரம் கொண்டவர்.
சற்றுப் பருமனான உடல், சிறிய கண்கள், மாநிறமானவர்.
முன்னங்கைகள் இரண்டிலும் பச்சை குத்தப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது.
20 வயதுகளில் உள்ள பெண், மாநிறத்தில் இருப்பார். சுமார் 1.6 மீட்டர் உயரமும் சிறிய உடல் அமைப்பும் கொண்டவராக இருப்பார் என போலிஸ் அறிக்கை தெரிவித்தது.
கண்கான¬ப்புக் கேமிராவில் படம் எடுக்கப்பட்டபோது ஆடவர் சிவப்பு நிற டீ சட்டையும், அரைக்கால் சட்டையும் தொப்பியும் அணிந்திருந்தாகவும், பெண் வெள்ளை டீ சட்டை, கருத்த நிறத்தில் முழுக்கால் சட்டையும், கருத்த நிற தொப்பியும் அணிந்திருந்ததாகப் போலிஸ் அறிக்கை தெரிவித்தது.
தகவல் அறிந்தவர்கள் 1800-255-0000 எண்ணுடன் போலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.