முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் மனிதக் கடத்தலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போலிஸ் நடவடிக்கையில் 37 வெளிநாட்டவருடன் சிங்கப்பூரர் ஒருவரும் தடுத்து வைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவரும் வியட்நாமைச் சேர்ந்த சிறார்களும் அடக்கம் என்று கூறப்படுகிறது.
இது பற்றிக் கூறிய ஜோகூர் மாநிலப் போலிஸ் தலைவர் முகமது மொக்தார் முகமது ஷரிஃப், ஸ்கூடாயில் உள்ள தாமான் யுனிவர்சிட்டியில் உள்ள ஒரு வீட்டில் அந்த வெளிநாட்டவர் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.
“அந்த சிங்கப்பூரர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
“அடைத்து வைக்கப்பட்ட 37 வெளிநாட்டவரும் கோலாலம்பூரில் உள்ள காப்பகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்,” என்றார்.