fontsize: 60% 70% 80% 90%

3 ஈரானியர்கள் மலேசியாவில் கைது

மலேசியாவுக்குள் போதைப்பொருள் கடத்திவர முயன்ற 2 பெண்கள் உள்பட மூன்று ஈரானியர்களை மலேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 4 மில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள போதைப் பொருள் அவர்களின் பயணப் பெட்டிகளுக்குள் இருந்ததாக மலேசிய சுங்கத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
54.54 கிலோ கிராம் போதைப் பொருள் இரு பைகளுக்குள் இருந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். அந்த மூவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாகவும் துபாயிலிருந்து வந்த அவர்கள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகவும் சுங்கத்துறை அதிகாரி முகம்மது சுபிரி அவாங் கூறினார்.
போதைப் பொருள் கடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இந்த ஆண்டு இதுவரை 10 ஈரானியர்களை மலேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்தியா, துபாய் உளளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளைக் கண்காணிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பை மலேசியா தீவிரப்படுத்தியுள்ளது. போதைப் பொருள் கடத்துவோருக்கு மலேசியாவில் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838