ஜார்ஜ் டவுன்: 'பொக்கிமோன்' கைபேசி விளையாட்டில் பயன் படுத்தப்படும் 'பொக்கிபால்ஸ்' போன்று தோற்றமளிக்கும் 'எக்ஸ் டசி' போதை மாத்திரைகளை மலேசிய காவல்துறையினர் கைப் பற்றியிருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு மேற் கொள்ளப்பட்ட அதிரடி சோதனை களில் 'பொக்கிபால்ஸ்' வடிவில் மாத்திரைகளும் பல வகையான போதைப் பொருட்களும் சிக்கிய தாக அவர்கள் கூறினர்.
இது குறித்துப் பேசிய மாநில போதைப் பொருள் தடுப்புப் பிரி வின் தலைவர் மெய்டு அபு பக்கர், "பொக்கிமோன் பந்துகள் வடிவில் எக்ஸ்டசி போதை மாத்திரைகள் சிக்கியிருப்பது இதுவே முதல் முறை," என்றார். கைபேசி செயலியான 'பொக்கி மோன் கோ' விளையாட்டில் சிவப்பு, வெள்ளை நிற 'பொக்கி பால்ஸ்' பந்துகள் பயன்படுத்தப்படு கின்றன. அதே போன்று எக்ஸ்டசி மாத் திரைகளும் பொக்கிமோன் பந்து கள் வடிவில் தயாரிக்கப்பட்டிருந் தன.
காவல்துறை அதிகாரி ஒருவர், 'பொக்கிபால்ஸ்' வடிவில் இருந்த போதை மாத்திரைகளைக் காட்டுகிறார். படம்: ஸ்டார் காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது.