முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
கதிரவனின் முழுவீச்சில் நிலா தென்படுமோ
வடதுருவத்தில் தென் துருவம் புலப்படுமோ
தீயினுள் கை நீட்டினால் குளிர்ந்திடுமோ
திருமகளிடத்தில் வறுமைக்கு இடமுண்டோ
கல்நெஞ்சரிடம்தான் இரக்கம் சுரக்குமோ
கவலைகள் சூழ்கையில் உறக்கம் வந்திடுமோ
எதிரெதிரான இரண்டு எங்கேனும் சேர்ந்திடுமோ
சேர்ந்திடக் கண்டேனே, அது என்ன மாயமோ
மனம் கவர்ந்தவள், மனத்தை மீட்டும் ஜாலமோ
ஏனெனில்.....
அவளே என் பலம்!
அவளே என் பலவீனம்!