fontsize: 60% 70% 80% 90%

எனக்கான சொற்கள் - பனசை நடராஜன்

எதிர்பாராத நேரத்தில்புயலாகத் தாக்கியதுபரவசச் சொற்கள்.. கடைத்தெரு, புல்தரை,மணல்வெளி எங்கும்துரத்தி, துரத்தி.. சேதப்படுத்தாமல்,சிலிர்க்கச் செய்ததால்ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும்விடிந்தன அதிகாலைகள்.. பனித்துளியின் ஆயுளாகதிடுமெனத் தொலைந்தனஎனக்கே எனக்கானஅந்தப் பரவசச் சொற்கள்.. வானவில் கறுப்பு வெள்ளையானவருத்தத்தோடு,எங்கேனும் தென்படுமா எனதேடிக்கொண்டே நடக்கையில்எல்லா திசைகளின் நெரிசலிலிருந்தும்வசை சொற்களே வரிசையாய்.. மௌனச் சிறைக்குள்மாட்டிக் கொண்டதோ?மறுபடியும் வேறெங்கோஎனைத் தேடுகின்றதோ? சந்திப்புக்கான நம்பிக்கையோடுதொடர்கிறது என் தேடல்இன்றும்..
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838