‘அனைவரையும் விழாக்கால உணர்வு சென்றடையவேண்டும்’

சீனப் புத்தாண்டின் முதல் நாளன்று (பிப்ரவரி 10), வயதானோருக்கும் வசதிகுறைந்த குடும்பங்களுக்கும் உணவும் சிவப்பு உறைகளையும் வழங்கினர் ‘ஏபெக்ஸ் கிளப்ஸ் சிங்கப்பூர்’ அறநிறுவனத்தின் 20க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள்.

காலை 8 முதல் 10 மணி வரை, தோ பாயோ லோரோங் 1, புளோக் 170ல் ஓரறை வீடுகளில் வசிக்கும் மொத்தம் 60 வசதிகுறைந்தோர் இதனால் பயனடைந்தனர்.

இம்முயற்சியை ‘ஏபெக்ஸ் கிளப்ஸ் சிங்கப்பூர்’ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தி வருகிறது.

தொண்டூழியர்கள், அரிசி, நூடல்ஸ், முட்டைகள், பிஸ்கெட்டுகள், ஓட்ஸ், மைலோ, புட்டி உணவுகள், ‘குவே’ போன்ற விழாக்கால உணவு வகைகளையும் சூடான காப்பி, இரு ஆரஞ்சுப் பழங்கள், பணத்துடன் கூடிய சிவப்பு உறைகள், ‘பிருந்தாஸ்’ உணவக உணவு ஆகியவற்றையும் அடுக்குமாடிக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் விநியோகித்தனர்.

சிவப்பு உறையை வயதானவருக்கு வழங்கும் தொண்டூழியர் நூர் சகினா. படம்: ஏபெக்ஸ் கிளப்ஸ் சிங்கப்பூர்

கீழே வர இயலாத வயதானோர், ஊனமுற்றோருக்கு வீட்டிற்கே சென்று அவற்றை வழங்கினர் தொண்டூழியர்கள்.

இதற்கு முன்பு, வீடு வீடாகச் சென்று குடியிருப்பாளர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியும் இடம்பெற்றது.

பல்லின மக்களும் விடுமுறை நாளன்று வயதானோர், வசதிகுறைந்தோருடன் தம் காலைப் பொழுதை செலவழித்ததைக் கண்டதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
‘ஏபெக்ஸ் கிளப்ஸ் சிங்கப்பூர்’ மூத்த உறுப்பினரும் இத்திட்டத்தின் தலைவருமான ஹாஜா ஜஃபருல்லாஹ்.

“உணவைப் பகிர்ந்துகொள்வதும் உதவி தேவைப்படுவோருக்கு உதவுவதும் சீனப் பாரம்பரியத்தில் வேரூன்றிய கூறுகள்.

“பண்டிகைக் காலங்களில் அனைவரிடமும் விழாக்கால உணர்வு சென்றடைவது முக்கியம்,” என்றார் ‘ஏபெக்ஸ் கிளப்ஸ் சிங்கப்பூர்’ அறநிறுவனத்தின் மூத்த உறுப்பினரும் இத்திட்டத்தின் தலைவருமான ஹாஜா ஜஃபருல்லாஹ்.

தன் பிள்ளைகளையும் அழைத்துவந்த நெடுநாள் தொண்டூழியர் தனம், “தொண்டூழியம் குடும்ப நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். எங்கள் முயற்சியைப் பாராட்டும் பயனாளிகளுடன் நேரம் செலவழிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

‘ஏபெக்ஸ் கிளப்ஸ் சிங்கப்பூர்’ அறநிறுவனத்தின்கீழ், பாசிர் ரிஸில் ‘ஏபெக்ஸ் ஹார்மனி லோட்ஜ்’ எனும் மறதிநோய் உடையோருக்கான தங்குவிடுதியும் புக்கிட் மேராவில் ‘ஏபெக்ஸ்’ முதியோர் பகல்நேரப் பராமரிப்பு நிலையமும் உள்ளன.

‘ஏபெக்ஸ் கிளப்ஸ் சிங்கப்பூர்’ அறநிறுவனம் குறித்த மேல்விவரங்களுக்கு https://apexrehab.org.sg/ மற்றும் https://www.apexharmony.org.sg/ இணையத்தளங்களை நாடலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!