உணவு நன்கொடையில் இன நல்லிணக்கம்

உணவு நன்கொடையிலும் இன நல்லிணக்கத்தைப் பாராட்டுகிறது ‘ஹாவ் ரன் ஹாவ் ஷி’ (ஹெச்ஆர்ஹெச்எஸ்) அறநிறுவனம்.

தீபாவளிக்காக 200க்கும் மேற்பட்ட மூத்தோருக்கும் வசதி குறைந்த குடும்பங்களுக்கும் உணவுப் பொருள்களையும் மதிய உணவையும் அக்டோபர் 21 சனிக்கிழமையன்று பெருமாள் கோவிலில் வழங்கியது ‘ஹெச்ஆர்ஹெச்எஸ்’.

‘புரோஜெக்ட் ஸ்மைல்’ மூலம் உதவி பெற்றுவரும் சுமார் 40 இந்திய பெண்மணிகளும், பெக் கியோ சமூக நிலையத்தின் பட்டியலின்படி 80-100 வசதிகுறைந்த குடும்பங்களும், 20 ‘தெம்புசு’ இல்லவாசிகளும் பயனாளிகளில் அடங்குவர்.

‘புரோஜெக்ட் ஸ்மைல்’ துடிப்பான மூப்படைதல் திட்டத்தைச் சார்ந்த 80க்கும் மேற்பட்டோரும் கலந்துகொண்டனர்.

பரோட்டா, இடியாப்பம், ஓமப்பொடி போன்ற இந்திய உணவுகளும் வழங்கப்பட்டன.

‘புரோஜெக்ட் ஸ்மைல்’ அதன் தரப்பில், அந்த 40 பெண்களுக்கு தீபாவளியைக் கொண்டாட ரொக்கமும் புதிய துணிமணிகளை வாங்க ஹனிஃபா பற்றுச்சீட்டுகளையும் வழங்கியது.

சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக தொழில் துணை அமைச்சர் திரு ஆல்வின் டான் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சிக்கு ஆதரவளித்தோருடன் சிறப்பு விருந்தினர் திரு ஆல்வின் டான், ‘ஹெச்ஆர்ஹெச்எஸ்’ நிறுவனர் திரு ஏன்சன் ஆங். படம்: ரவி சிங்காரம், ஹாவ் ரன் ஹாவ் ஷி

‘ஹெச்ஆர்ஹெச்எஸ்’ அறநிறுவன மேலாண்மைக் குழு உறுப்பினரும் சிங்கப்பூர் விமானச் சேவையின் செயல்பாடுகளின் தலைவருமான கேப்டன் கோபால சுப்பிரமணியம், ‘ஹாவ் ரன் ஹாவ் ஷி’ நிறுவனத்தின் முக்கிய நெறிகளை விவரித்தார்.

“வசதிகுறைந்தோர், எளிதாகவும் கெளரவமாகவும் உணவுப் பொருள்களைப் பெற வழிவகுக்கிறோம்,” என்றார்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் விக்னேஷ், ஷாமினி, “குடும்பமாக சேவையாற்ற இது ஒரு நல்ல வாய்ப்பு,” என்றனர்.

நிகழ்ச்சி நடந்த அதேவேளை, ‘ஹெச்ஆர்ஹெச்எஸ்’ புக்கிட் மேராவிலும் 100 குடியிருப்பாளர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கியது.

ஒவ்வொரு வாரமும் சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் உணவு நன்கொடையை வழங்கிவருகிறது ‘ஹெச்ஆர்ஹெச்எஸ்’ .

‘ஹெச்ஆர்ஹெச்எஸ்’ நிறுவனர் ஏன்சன் ஆங், 20 ஆண்டுக்கும் மேற்பட்ட சமூக சேவைக்காக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தலைசிறந்த சிங்கப்பூரர் 2022 விருதையும் ‘சைலண்ட் ஹீரோஸ்’ 2021 விருதையும் பெற்றவர்.

இறுதிக்கட்ட நோயாளிகளின் பயணங்களுக்கும் உணவுகளுக்கும் மட்டுமல்லாது, வறியவர்களின் இறுதிச் சடங்குகளுக்கும் நிதியுதவி வழங்கிவருகிறார் திரு ஏன்சன்.

சென்ற ஆண்டு தீபாவளியின்போது 1,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கியது ‘ஹெச்ஆர்ஹெச்எஸ்’.

மேல்விவரங்களுக்கு: https://www.haorenhaoshi.org.sg/ மற்றும் https://www.youtube.com/@haorenhaoshi6835

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!