3,500 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசுப்பை

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் வழங்கப்படும் பரிசுப் பொருள்கள் சமூகத்தின் எல்லா படிநிலைகளில் உள்ள மக்களும் சேர்ந்து கொண்டாட வழிவகுக்கும் என்கிறார் அங் மோ கியோவைச் சேர்ந்த 60 வயதாகும் திருவாட்டி கற்பக விஜயா ராணி.

மக்கள் கழக நற்பணிப் பேரவை, மக்கள் கழக மலாய் நற்பணி மன்றம் (மெஸ்ரா) இணைந்து அக்டோபர் 21 முதல் நவம்பர் 9 வரை சமூகத்தில் வசதி குறைந்த 3,500 குடும்பங்களுக்கு தீபாவளிப் பரிசுப் பைகளை வழங்குகின்றன.

அதன் முதற்கட்டமாக சனிக்கிழமை, அக்டோபர் 21ஆம் தேதியன்று அங் மோ கியோ அவென்யூ 4ல், 11 இந்தியக் குடும்பங்கள் உட்பட 160 குடும்பங்களுக்குப் பரிசுப் பைகள் வழங்கப்பட்டன.

இப்பரிசுப் பையைப் பெற்றுக்கொண்ட இப்பகுதி குடியிருப்பாளரான ராணி, “தீபாவளியை எப்படிக் கொண்டாடுவது என்ற ஏக்கம் எனக்குள் இருந்தது. பண்டிகை வருவது மகிழ்ச்சி என்றாலும், குழந்தைகளுக்குத் துணிமணிகள், பலகாரம் என வாங்க வேண்டியுள்ளது.

சமையல் பணி செய்யும் கணவரது குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்தும் எங்களை போன்றோரது வீடுகளில் பண்டிகைக்கால மகிழ்ச்சியை இவ்வகைப் பரிசுப் பொருள்கள் அதிகரிக்கும். இவை தீபாவளி வந்து விட்டதை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது,” என்றார்.

பல்வேறு உணவுப் பண்டங்கள் கொண்ட தீபாவளிப் பரிசுப்பை படம்: லாவண்யா வீரராகவன்

கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து இப்பரிசுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டு கூடுதலாக நற்பணிப் பேரவை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘குக்கி’ வகைகளுடன், தேநீர், ‘மைலோ’, உலர் பழங்கள் என ஏறத்தாழ 50 வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் அடங்கிய பைகளை, 40 தொண்டூழியர்கள் வீடு வீடாகச் சென்று விநியோகித்தனர்.

இதனைத் தொடங்கி வைத்துப் பேசிய கெபுன் பாரு அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஹென்றி குவேக், “சமூகத்தில் உதவி தேவைப்படும் பலர் வெளிவந்து சொல்வதில்லை. வீடுகளுக்கே சென்று பரிசு வழங்கும் திட்டங்கள் அவர்களுக்குப் பெரிதும் நன்மையாக இருக்கும்,” என்றார்.

தொடர்ந்து வீடுகளுக்குச் சென்று பரிசுப் பைகள் விநியோகம் செய்ததோடு, மக்களுடனும் தொண்டூழியர்களுடனும் நேரம் செலவிட்டார்.

பரிசுப் பையை பெற்றுக்கொண்ட அங் மோ கியோ குடியிருப்புவாசி படம்: லாவண்யா வீரராகவன்

இதனைப் பெற்றுக் கொண்ட மற்றொரு குடியிருப்பாளரான திருவாட்டி எலிசபெத் மேரி, 60, தீபாவளி காலத்தில் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பல கொண்டாட்டங்களை நிகழ்த்துவது பார்ப்பதற்கு நன்றாக இருப்பதாகவும் இந்த பரிசுப் பொருள்கள் மிகவும் உதவியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய மக்கள் கழக நற்பணிப் பேரவைத் தலைவர் திரு கி. ராமமூர்த்தி, “ தொடக்க விழாவில் நாங்கள் வந்து விநியோகிப்பதைத் தொடர்ந்து மற்ற தொகுதிகளுக்கு, அந்தந்த சமூக மன்றங்கள் மூலம் கொண்டு சேர்த்து விடுவோம். இச்சமூகத்தில் இருக்கும் அனைவரும் நம்மில் ஒருவர் எனும் உணர்வுடன் செயல்படும் எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்தப் பரிசுகள். இதை செய்வது நிறைவாக உள்ளது,” என்று தெரிவித்தார்.

இதில் பங்குபெற்ற தொண்டூழியர் சுகந்தி கூறுகையில், “இதற்கு முன்னர் சிறு சிறு நிகழ்வுகளுக்கு தொண்டூழியம் செய்த எனக்கு இன்று பெரிய அளவில் நடக்கும் நிகழ்வில் அனைவருடன் கலந்து கொண்டதும், பல குழுக்களாகப் பிரிந்து வீடுகளுக்குச் சென்று பரிசுப் பைகள் வழங்கியதும் நல்ல அனுபவமாக இருந்தது,” என்றும் கூறினார்.

இப்பேரவை உறுப்பினர்களோடு, தொண்டூழியர்கள், இளையர் குழு உறுப்பினர்கள் என அனைவரும் இணைந்து இத்திட்டத்தின் முதற்கட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!