கேரளாவில் கனமழை: சபரிமலைக்கு சிவப்பு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: தென் இந்தியாவில் புதன்கிழமை முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகளில்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதற்கு காரணம்.

கேரளாவில் நிலைமை மோசமாக உள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கிய பருவமழை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும் இந்திய வானிலை ஆய்வு நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் மட்டும் 2 மணி நேரத்தில் 210 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கோட்ட தட்டி, சென்னீர்கரையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

மேலும் திருவனந்தபுரம், இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கண்ணூர் மற்றும் காசர்கோடு தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு கனமழையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வழிபாட்டுக்காக சென்று வருகின்றனர். தற்போது அங்கு கனமழை பெய்து வருவது பக்தர்களுக்கு பெரும் இடர்ப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.

மழையால் பக்தர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கோவில் நிர்வாகமும், பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிலக்கல்லில் இருந்து பம்பை செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பக்தர்கள் அந்த பாதையில் செல்வதை தவிர்க்கவும், அவர்கள் பாதுகாப்பாக பயணிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சபரிமலையில் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு மலையோர பகுதிகளுக்கு இரவு பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டமும் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. அங்கு தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பார்வதி புத்தனாறு, பட்டம் கால்வாய்கள் நிரம்பியதால் தண்ணீர் வெளியேறின.

குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. பொதுமக்கள் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில் மின் தடையும் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

வருகிற 28ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!