பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.
விக்ரம் நடிப்பில் அதிகப்பொருள் செலவில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப்படம் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தொழில்நுட்பப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதால் வரும் ஏப்ரல் மாதத்திற்கு இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கோலார் தங்கச்சுரங்கத்தில் தமிழர்கள்பட்ட துயரத்தை மையமாக வைத்து உருவாகும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.