கலையுலகை காத்து பலருக்கும் உதவிய விஜயகாந்த்

வளரும் கலைஞர்களுக்கு உதவி

ஆரம்பத்தில் இவரது கறுப்பு நிறம் கலையுலகில் சிலரால் விமர்சிக்கப்பட்டு பின் கரடு முரடான பாதைகள் பல கடந்து, கடின உழைப்பிற்குப் பின் கலையுலகில் நிலையான இடம்பிடித்து, மலையளவு உச்சம் தொட்ட மதுரை மண்ணின் பெருமை மிகு அடையாளமாக பார்க்கப்படும் விஜயகாந்த், தான் அனுபவித்த வலியும், சிரமங்களும் வேறு எந்த ஒரு வளரும் திரைக்கலைஞருக்கும் நேராத வண்ணம் உதவிக்கரம் நீட்டி, பல திரைப்படக் கல்லூரி மாணவர்களை இயக்குநர்களாக்கினார்.

கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு

‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘பூந்தோட்டக் காவல்காரன்’, ‘செந்தூரப்பூவே’, ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘பரதன்’ என ஏராளமான திரைப்படங்களின் மூலம், ஆபாவாணன், ஆர்.அரவிந்த்ராஜ், செந்தில்நாதன், பி ஆர் தேவராஜ், ஆர்கே செல்வமணி, எஸ்டி சபா போன்ற பல திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு தந்து, அவர்கள் பின்னாளில் பிரபல இயக்குநராக வர பேருதவி புரிந்தவர் ‘கேப்டன்’ விஜயகாந்த்.

கலையுலகை காத்து நின்ற காவல்காரன்

4.5 கோடி ரூபாய் கடனில் இருந்த நடிகர் சங்கத்தை, இவர் தலைமையேற்ற பின் தனது திறமையான அணுகுமுறைகளால், ‘நட்சத்திர இரவு’ என்ற நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து, அதிலிருந்து பெறப்பட்ட தொகையைக்கொண்டு கடனை அடைத்து நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தார்.

விஜய்யை ஏற்றிவிட்ட ஏணிப்படி

நடிகர் விஜய்யின் முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ தோல்வியடைய, இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகருக்காக, தானே மனமுவந்து விஜய்யோடு நடித்துக் கொடுத்த திரைப்படம்தான் ‘செந்தூரப்பாண்டி’. மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற இத்திரைப்படத்திற்குப் பின் நடிகர் விஜய்யின் திரைப்பயணமும் பிரகாசமானது.

ஒரே ஆண்டில் 18 படங்கள்

1979ஆம் ஆண்டு தனது கலையுலகப் பயணத்தை ஆரம்பித்த நடிகர் விஜயகாந்த், 1984ஆம் ஆண்டில் மட்டும் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தார். மேலும் தமிழில் வெளியான முதல் 3டி திரைப்படமான ‘அன்னை பூமி’ திரைப்படத்தின் நாயகனாகவும் நடித்து பிரமிக்க வைத்தார்.

பிறமொழியில் நடிக்காத கேப்டன்

தனது நீண்ட நெடிய இந்தக் கலைப்பயணத்தில் வேறு எந்த மொழி திரைப்படங்களிலும் நடிக்காமல், தமிழில் மட்டுமே 156 படங்களில் நடித்து, தமிழ் நடிகராக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

பெயரை மாற்றிய பெருமை

தென்னிந்திய, அகில இந்திய என இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களின் பெயர்களை, 1982ஆம் ஆண்டு ‘தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம்’ என பெயர் மாற்றம் செய்து, தமிழ்நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்தார்.

நலிந்த கலைஞர்களுக்கு உதவி

நடிகர் சங்கத் தலைவராக இவர் இருந்தபோதுதான், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவும் பொருட்டு, ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்து, அதற்காக ஒரு பெரிய தொகையையும் டெபாஸிட் செய்து வைத்தார்.

வறுமை ஒழிப்பு தினம்

ஈழத் தமிழர்களின் அல்லல்களை அறிந்த விஜயகாந்த், தனது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை தவிர்த்ததோடு, அந்த நாளை ‘வறுமை ஒழிப்பு தினம்’ என அறிவித்து, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வழிவகையும் செய்து வறியோரின் மனங்களிலும், எளியோரின் மனங்களிலும் ஏழைப் பங்காளனாய் இடம் பிடித்தார்.

விஜயகாந்த் சினிமாவில் வாய்ப்பு தேடும்போது பல கஷ்டப்பட்டு இருக்கிறார். அதனால் சாப்பாட்டு கஷ்டம் எப்படி இருக்கும் என்பதை அறிந்த விஜயகாந்த் தாம் நட்சத்திர அந்தஸ்து பெற்ற பிறகு தன்னுடைய அலுவலகத்தில் தினமும் மதிய வேலை 200 பேருக்கு சாப்பாடு கிடைக்கும் வசதியை கொண்டு வந்தவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!