கூகலில் அதிகம் தேடப்பட்ட நடிகை திரிஷா

இந்த ஆண்டில் கூகலில் அதிகமானோர் தேடிய நடிகை யார் என்ற பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் குந்தவை என்று விஜய்யால் செல்லமாக அழைக்கப்படும் திரிஷா.

நாயகியாக 21 ஆண்டுகளைக் கடந்த நடிகை திரிஷா தற்பொழுது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

“ஒரு படத்திற்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்கினால் மட்டும் ரசிகர்கள் மனங்களைக் கவர்ந்துவிட முடியாது. ஒரு படத்தில் நடித்தாலும் அந்தப் படத்தில் தரமாக நடிக்கவேண்டும்,” என்ற கொள்கையை உடையவர் திரிஷா. அப்படி அவர் இந்த ஆண்டு நடித்ததால்தான் அதிகம் தேடப்படும் நாயகிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கிறார்.

நடிகை திரிஷா ‘மௌனம் பேசியதே’ படத்தில் நாயகியாக அறிமுகமாகி, நேற்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனை ஒரு பக்கம் திரிஷாவின் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், 2023ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட நடிகை என்ற அந்தஸ்தையும் இவர் பெற்றுள்ளார்.

திரிஷா நாயகியாக அறிமுகமானதில் இருந்து இன்று வரை திரையுலகில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தவர். குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க போராடி வந்தார்.

திடீரென்று அதிர்ஷ்டம் இவருடைய வாசல் கதவைத் தட்டியது. அது வேறு யாருமல்ல. மணிரத்னம்தான். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவையாக நடிக்க வைத்தார். அதில் தன்னுடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார் திரிஷா. இந்தப் படத்தில் இவரின் ஒப்பனை, உடை என அனைத்துமே ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது.

அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘கில்லி’ படத்திற்குப்பின் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக ‘லியோ’ படத்தில் இணைந்தார். தளபதி நாயகி என்றால் சொல்லவா வேண்டும்? இவரைப் பற்றிய தகவல்களை விஜய்யின் ரசிகர்கள் கூகுளில் அதிகம் தேடத் தொடங்கினர்.

அதைத் தொடர்ந்து அஜித்துக்கு ஜோடியாக ‘விடாமுயற்சி’ படத்திலும் இணைந்தார். உடனே அஜித் ரசிகர்களால் தேடப்பட்டார். இதற்கிடையில் எழுந்த மன்சூர் அலிகான் பிரச்சினை தொடர்பாகவும் திரிஷா பற்றிய தகவல்கள் அதிகம் சமூக வலைத்தளத்தில் தேடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த ஆண்டு முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக மட்டுமன்றி ரசிகர்களை அதிகம் கவர்ந்த நாயகியாகவும் மாறியுள்ளார் திரிஷா.

ரசிகர்கள் 2023ஆம் ஆண்டு கூகுளில் திரிஷாவைப் பற்றி அதிகம் தேடியதாகக் கணக்கிடப்பட்டு இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ‘காவாலா’ பாடல் மூலம் பிரபலமான தமன்னா உள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் நயன்தாரா முதல் இரண்டு இடத்தில் இல்லை என்பது தெளிவாகி உள்ளது.

கதாநாயகியாக அறிமுகமாகி 21 ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை, தமிழில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வரும் நடிகை திரிஷாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை திரிஷா, 21 ஆண்டுகள் நிறைவு பெற்றதற்கு வாழ்த்து கூறிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!