சிம்பு நடித்துள்ள 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அந்நிகழ்வை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
என்.கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார் சிம்பு. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சிம்புவுடன் கவுதம் வாசுதேவ் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.