தரைப்பந்து ஆர்வத்தை விதைக்கும் இளையர்கள்

ஆ. விஷ்ணு வர்­தினி

 

பதின்ம வய­தி­லி­ருந்தே விக்­னேசா பசு­பதி, கும­ரேசா பசு­பதி, ஷாஸ்னி ராம்லி ஆகிய மூவ­ரும் சிங்­கப்­பூர் தேசிய தரைப்­பந்து அணி­யில் விளை­யா­டி­ய­வர்­கள். தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­கள், அனைத்­து­லக ஆண்­கள் தரைப்­பந்து போட்­டி­கள் முத­லி­ய­வற்­றில் இவர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு பதக்­கங்­களை வென்­று தந்­த­வர்­கள்.

மற்ற விளை­யாட்­டு­க­ளைக் காட்­டி­லும் தரைப்­பந்து விளை­யாட்டு என வரும்­போது இளை­யர்­க­ளுக்கு உள்ள ஆத­ரவு குறைவே எனத் தத்­தம் பய­ணங்­களில் உணர்ந்த இம்­மூ­வ­ரும், அக்­கு­றை­யைப் போக்க எண்ணி ‘ஸ்டார் ஃப்ர்ளோர்­பால் அகா­டமி’ எனும் பயிற்­சிக் கழ­கத்­தைத் தொடங்­கி­யுள்­ள­னர்.

சிறார் முதல் 17 வயது வரை­யி­லான இளை­யர்­க­ளுக்கு இக்­க­ழ­கம் பயிற்சி அளித்து வரு­கிறது. இக்­க­ழ­கத்­தில் பயிற்சி வழங்­கும் 9 பயிற்­று­விப்­பா­ளர்­களில் தற்­போ­தைய தேசிய தரைப்­பந்து விளை­யாட்­டா­ளர்­களும் முன்­னாள் விளை­யாட்­டா­ளர்­களும் அடங்­கு­வர். சிறு­வர்­

க­ளுக்­குத் தனிப்­பட்ட முறை­யில் தொடர் பயிற்­சி­யும் தொழில்­முறை தரைப்­பந்து குறித்த வழி­காட்­டு­த­லும் வழங்­கும் தள­மாக இயங்­கு­வதே இக்­க­ழ­கத்­தின் நோக்­கம் என்று மூவ­ரும் தெரி­வித்­த­னர்.

“சிறு­வ­ய­தி­லி­ருந்தே தேசிய விளை­யாட்­டா­ளர்­க­ளின் துணை­கொண்டு மாண­வர்­கள் பயிற்சி எடுக்­கும்­போது, அவர்­க­ளுக்­குத் தரைப்­பந்து மீதான ஆர்­வம் அதி­க­ரிக்­கும் என நம்­பி­னோம். எங்­க­ளின் அனு­ப­வங்­க­ளைக் கொண்டு, தொழில்­முறை தரைப்­பந்­தில் சிறந்து விளங்­கு­வ­தற்­கான வழி­காட்­டு­த­லை­யும் நம்­பிக்­கை­யை­யும் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு அளிக்க முற்­பட்­டுள்­ளோம்,” என்­றார் 26 வயது கும­ரேசா பசு­பதி. இரட்டையரான கும­ரே­சா­வும் விக்­னே­சா­வும் தொடக்­கப்­பள்­ளி­யி­லி­ருந்தே தரைப்­பந்து விளை­யாடி வந்திருக்­கி­றார்­கள். இவர்­க­ளின் நோக்­கத்­துக்­குக் கைகொ­டுக்க, அவர்­க­ளின் கோரிக்­கையை ஏற்று அல்­லது தாமா­கவே பயிற்­று­விப்­பா­ளர்­

க­ளாக இணைய முன்­வந்­தி­ருந்­த­னர் சக தரைப்­பந்து அணி விளை­யாட்­டா­ளர்­கள்.

ஷாஸ்னி, கும­ரேசா, விக்­னேசா ஆகி­யோ­ரின் நட்பு கிட்­டத்­தட்ட பத்­தாண்­டு­க­ளுக்கு முன்­னர் தேசிய அணி­யில் தொடங்­கி­யது. தொடக்­கக் கல்­லூரி காலத்­தில் விக்­னேசா, கும­ரேசா இரு­வ­ரின் பள்ளி தரைப்­பந்து பயிற்­று­விப்­பா­ள­ராக ஷாஸ்னி இருந்­தார். பின்­னர், தேசிய ஆண்­கள் தரைப்­பந்து அணி­யின் தலை­வ­ரா­கப் பரி­மா­ணம் கண்­டார். 13 ஆண்­டு­க­ளாக தரைப்­பந்து பயிற்­று­விப்­பா­ள­ராக இருந்­து­வ­ரும் ஷாஸ்னி, தற்­போது சிங்­கப்­பூ­ரின் ‘யு19’ அணி­யின் தலை­மைப் பயிற்­று­விப்­பா­ள­ரா­க­வும் உள்­ளார்.

சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் விளை­யாட்டு, உடற்­ப­யிற்­சிக் கல்வி பயி­லும் விக்­னே­சா­வும் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் வணிக நிர்­வா­கம் பயி­லும் கும­ரே­சா­வும் தரைப்­பந்­தி­லி­ருந்து கடந்த ஆண்டு ஓய்­வு­பெற்­றி­ருந்த ஷாஸ்­னியைச் சந்தித்து, பயிற்சிக் கழகம் தொடங்குவது குறித்து பேசினர்.

“இக்­க­ழ­கத்­தைத் தொடங்­கு­வ­தற்­கான திறன்­கள் எங்­கள் மூவ­ரி­ட­மும் இருந்­த­தென அவர்­கள் திண்­ண­மாக கூறி­னர். என் பயிற்று­விப்பு அனு­ப­வத்­தை­யும் அவர்­கள் குறிப்­பிட்­ட­னர். எங்­கள் மூவ­ரின் தனிப்­பட்ட திறன்­க­ளை­யும் பலங்­க­ளை­யும் ஒன்­றி­ணைத்­த­தன் பய­னாக இக்­க­ழ­கம் பிறந்­தது,” என்­றார் 32 வயது ஷாஸ்னி.

இளை­யர்­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டு­வது இம்­மூ­வ­ரின் மன­துக்கு நெருங்­கிய ஒன்­றா­கும். பள்­ளி­களில் பகு­தி­நே­ரத் தரைப்­பந்து பயிற்­று­விப்­பா­ள­ராக உள்ள விக்­னேசா, “வள­ரும் பரு­வத்­தில் தரைப்­பந்து விளை­யா­டு­வது அவர்­க­ளின் மன­ந­ல­னுக்­கும் உடல்­ந­ல­னுக்­கும் துணை­நிற்­கும். குறிப்­பாக, எளி­தில் பாதிப்­ப­டை­யும் அபா­யத்­தில் உள்ள இளை­யர்­களை விளை­யாட்­டில் ஈடு­ப­டுத்­து­வ­தன்­மூ­லம் அவர்­க­ளுக்கு உத­வ­லாம் என்று நம்­பு­கி­றோம்,” என்­றார். ஜன­வ­ரி­யில் இக்­க­ழ­கத்­தைத் தொடங்­கிய மூவ­ருக்­கும் அமோக வர­வேற்பு கிடைத்­துள்­ள­தாக விக்­னேசா கூறுகிறார். முதல் பயிற்சி நாளன்று ஏறத்­தாழ 60 பேர் வந்­தி­ருந்­த­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

“அரங்­கம் நிறைய பெற்­றோர் அமர்ந்து பயிற்­சி­யின்­போது தங்­க­ளின் பிள்­ளை­களை ஊக்­கு­வித்த காட்சி எங்­கள் உழைப்­புக்கு அங்­கீ­கா­ரம் கிடைத்­த­து­போன்ற உணர்­வைத் தந்­தது,” என்று அவர் கூறி­னார்.

விக்­னேசா, கும­ரே­சா­வின் தாயார் இவர்­க­ளின் முயற்சி குறித்து பெரு­மி­தம் கொள்­வ­தாக தெரி­வித்­தார்.

“வர்த்தக நோக்­கத்­தை­விட சமூ­கத்­துக்கு, குறிப்­பாக சிறு­வர்­க­ளுக்­கும் இளை­யர்­க­ளுக்­கும் ஆத­ர­வ­ளிக்­க­வேண்­டும் என்ற இவர்­க­ளின் நோக்­கம் எங்­க­ளைப் பெரு­மையடைச் செய்­துள்­ளது,” என்­றார் 66 வயது திரு­வாட்டி ஜெயந்தி ஸ்ரீநி­வா­சன்.

சிறு­வ­ய­தி­லி­ருந்தே குழு­வு­ணர்வு, விட்­டுக்­கொ­டுக்­கும் தன்மை, தலை­மைத்­து­வம் ஆகிய திறன்­களை வளர்க்­கும் தரைப்­பந்து போன்ற விளை­யாட்­டு­களை, சிறு­வர்­க­ளி­டத்­தில் வலி­யு­றுத்­து­வது அவ­சி­ய­மென நம்­பு­வ­தா­க­வும் இவர் தெரிவிக்கிறார்.

இக்­க­ழ­கத்­தில் இணை­யும் மாண­வர்­கள் தங்­க­ளு­டன் நீண்ட காலம் பய­ணிப்­பர் என்ற நம்­பிக்கை இம்­மூ­வ­ருக்­கும் உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!