உல‌க‌ம்

சிட்னி: பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா தீவில் குறைந்தது அறுவரை பலிவாங்கிய கலவரம் மூண்டதைத் தொடர்ந்து பிரான்சைச் சேர்ந்த சுமார் 1,000 காவல்துறை அதிகாரிகள் அவ்வட்டாரத்தைச் சென்றடைந்துள்ளனர்.
தெஹ்ரான்: ஈரானிய அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அவர் மாண்டுவிட்டதாக ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு அசர்பைஜானில் மூடுபனி நிறைந்த மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது அது விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை, கரைபுரண்டோடிய வெள்ளம் காரணமாக குறைந்தது 47 பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் மே 19ஆம் தேதியன்று தெரிவித்தார்.
ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங்கு நகரில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் அத்துமீறி நுழைந்த ஆடவர் ஒருவர், அங்கிருந்த காவலர் வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு ஓட முயற்சி செய்தார்.
ஹாங்காங்: ஹாங்காங்கின் பிரபலம் ஒருவரது கல்லறையைச் சேதப்படுத்திய சந்தேகத்தில் காவல்துறையினர் 23 வயது ஆடவரையும் 15 வயதுச் சிறுவனையும் கைதுசெய்துள்ளனர்.