25 ஆண்டுச் சிறை: அமெரிக்காவிலிருந்து தப்பிய செல்வ முதலியார் தாய்லாந்தில் சிக்கினார்

பேங்காக்: ஆட்கடத்தல், பாலியல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 25 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவிலிருந்து தப்பி தாய்லாந்துக்குச் சென்ற ஆடவர் பிடிபட்டார்.

செல்வ டெலானோ முதலியார், 37, என்ற அந்த ஆடவருக்கு அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ள ஒரு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் குறைந்தது 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததாகத் தாய்லாந்து காவல்துறை அறிக்கை தெரிவித்தது.

பிணை விடுப்பில் வெளியான செல்வ முதலியார் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்று, அங்கு கடந்த மூன்று மாதகாலத்திற்கும் மேலாக வசித்து வந்ததாகக் கூறப்பட்டது.

அவர் அவ்வப்போது தங்குமிடத்தை மாற்றிக்கொண்டே இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று (மே 7) பேங்காக்கில் உள்ள ஒரு கூட்டுரிமைக் குடியிருப்பில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.

முன்னதாக, செல்வ முதலியாரைப் பிடிக்க அமெரிக்கப் புலனாய்வுத் துறை, தாய்லாந்துக் காவல்துறையின் உதவியை நாடியிருந்தது.

அவர் விரைவில் நாடுகடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“காவல்துறை தன்னைத் தேடி வருகிறது என்பதை முதலியார் அறிந்திருந்ததாக நம்பப்படுகிறது,” என்று தாய்லாந்துக் காவல்துறை உயரதிகாரி கொர்கியாட் உத்திஜம்னாங் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், முதலியார் அமெரிக்காவில் எத்தகைய பாலியல் குற்றங்களில் ஈடுபட்டாரோ, அவற்றைத் தாய்லாந்திலும் அரங்கேற்றி இருக்கக்கூடும் என்று தாய்லாந்துக் காவல்துறை கவலைப்படுவதாகவும் அவர் சொன்னார்.

முதலியாரைப் பிடிக்க உதவியதற்காக பேங்காக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம், தாய்லாந்துக் காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!