தாக்குதல்களின் எதிரொலி: ‘சேரிட்டி ஷீல்டு’ காற்பந்தாட்டத்தில் சிலாங்கூர் களமிறங்காது

பெட்டாலிங் ஜெயா: அண்மையில் மலேசியக் காற்பந்து ஆட்டக்காரர்கள், அதிகாரிகள் பலர் தாக்கப்பட்டதை அடுத்து, மே 10ஆம் தேதி நடைபெற இருக்கும் மலேசிய சேரிட்டி ஷீல்டு காற்பந்தாட்டத்தில் களமிறங்கப்போவதில்லை என்று சிலாங்கூர் காற்பந்துக் குழு அறிவித்துள்ளது.

அந்த ஆட்டத்தில் ஜோகூர் டாருல் தக்சிம்முடன் அது மோத இருந்தது.

சிலாங்கூரின் நட்சத்திர ஆட்டக்காரர் ஃபைசால் ஹாலிம் மீது அண்மையில் அமில வீச்சு நடத்தப்பட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மே 5ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கோத்தா டமான்சாரா கடைத்தொகுதியில் அவர் தாக்கப்பட்டார்.

“கடந்த 72 மணி நேரத்தில் மலேசியக் காற்பந்து ஆட்டக்காரர்கள், அதிகாரிகளுக்கு எதிரான தாக்குதல்களையும் விடுக்கப்பட்ட மிரட்டல்களையும் கருத்தில் கொண்டு அவர்களது பாதுகாப்புக் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேரிட்டி ஷீல்டு ஆட்டத்தில் விளையாடப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்,” என்று சிலாங்கூர் காற்பந்துக் குழு கூறியது.

சிலாங்கூர் காற்பந்துக் குழு எடுத்துள்ள இந்த முடிவுக்கு சிலாங்கூர் மன்னர் சுல்தான் ஷரஃபுதீன் இட்ரிஸ் ஷா ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆட்டக்காரர்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டும் சேரிட்டி ஷீல்டு ஆட்டத்தைத் தொடர மலேசியக் காற்பந்துச் சங்கம் முடிவெடுத்திருப்பது ஏமாற்றமளிப்பதாக அவர் அதிருப்தி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!