கோலா குபு பாரு இடைத்தேர்தல்: இந்திய வாக்காளர்களை ஈர்ப்பதில் தீவிரம் காட்டும் கட்சிகள்

கோலாலம்பூர்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த கோலா குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 11ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

இதில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் துருப்புச் சீட்டு அத்தொகுதியைச் சேர்ந்த இந்திய வாக்காளர்களின் கையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மலேசியாவில் உள்ள ஒருசில தொகுதிகளில் மட்டுமே இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவற்றில் கோலா குபு பாரு சட்டமன்றத் தொகுதியும் ஒன்று.

கோலா குபு பாரு இடைத்தேர்தலில் வாக்களிக்க ஏறத்தாழ 40,000 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களில் 18 விழுக்காட்டினர் இந்தியர்கள்.

வாக்காளர்களில் 49.6 விழுக்காட்டினர் மலாய்க்காரர்களும் 30.6 விழுக்காட்டினர் சீனர்களும் ஏனைய இனத்தினர் 2.1 விழுக்காட்டினரும் அடங்குவர்.

ஆளுங்கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானுக்குப் பெரும்பாலான சீனர்கள், இந்தியர்கள், நகர்ப்புற மலாய்க்காரர்களின் ஆதரவு உள்ளது. ஆனால் இது குறைந்து வருகிறது.

குறிப்பாக, இந்தியர்களின் ஆதரவு குறைந்து வருகிறது.

அரசாங்கம் தங்களைக் கண்டுகொள்ளவில்லை என்றும் தங்களது தேவைகளை அது பூர்த்தி செய்யவில்லை என்றும் மலேசிய இந்தியர்கள் மத்தியில் அதிருப்தி அலை வீசுகிறது.

இந்நிலையில், இந்திய வாக்காளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க இடைத்தேர்தலில் களமிறங்கும் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

இந்திய வாக்காளர்களின் ஆதரவைப் பெற வேட்பாளர்களும் கட்சியினரும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

சீனர்களின் ஆதரவு தனக்கு இல்லை என்று தெரிந்து இடைத்தேர்லில் வாக்களிக்க இருக்கும் ஏறத்தாழ 7,200 இந்தியர்களின் ஆதரவைப் பெற பெரிக்காத்தான் நேஷனல் மும்முரம் காட்டி வருவதாக மலேசிய கெபங்சாஹான் பல்கலைக்கழகத்தின் இனக் கல்விக் கழகத்தின் பேராசிரியர் கர்த்தினி அபூ தலிப், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

“இந்த இடைத்தேர்தலின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் சக்தி இந்திய வாக்காளர்களிடம் இருப்பது போல் தெரிகிறது,” என்றார் பேராசிரியர் கர்த்தினி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!