ஆசியான்-இந்தியா உறவை மேம்படுத்த மலேசியா அழைப்பு

புதுடெல்லி: ஆசியான்-மலேசியாவுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும்படி மலேசியா அழை:பபு விடுத்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய, இந்திய அதிகாரிகள் புதுடெல்லியில் இருதரப்புக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில் மலேசியா இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.

மே 2, 3ஆம் தேதிகளில் 26வது ஆசியான்-மலேசிய மூத்த அதிகாரிகள் கூட்டத்திற்கு ஆசியான்-மலேசிய தேசிய செயலக தலைமை இயக்குநர் திருவாட்டி ஸனாரியா சைனல் அபிதின் தலைமை தாங்கினார்.

அந்தக் கூட்டத்தில் ஆசியான்-இந்தியா முழுமையான ஒத்துழைப்புடன் கூடிய உத்திபூர்வ பங்காளித்துவ அடிப்படையில் பல்வேறு திட்டங்கள், முயற்சிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

இதில் மலேசியா எரிசக்தி உருமாற்றம், வர்த்தகம், பயங்கரவாத எதிர்ப்பு, மின்னிலக்கம், அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் லாவோஸ் தலைநகர் வியந்தியனில் நடைபெறவுள்ள ஆசியான்-இந்தியா உச்சநிலை மாநாட்டு தொடர்பான முன்னேற்பாடுகளும் விவாதிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!