காஸா போர்நிறுத்தத்தை உறுதி செய்ய சமரசப் பேச்சாளர்கள் முழு முயற்சி

கெய்ரோ: புனித ரமலான் மாதத்திற்கு முன்பு காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது. ஆனால் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான சண்டை நிறுத்தத்தை உறுதி செய்ய சமரசப் பேச்சாளர்கள் முழு மூச்சுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்று இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் மார்ச் 9ஆம் தேதி தெரிவித்தது.

பிணைக்கைதிகளை விடுவிக்க உதவும் சண்டை நிறுத்தம் பற்றி அமெரிக்காவின் சிஐஏயின் இயக்குநர் வில்லியம் பர்ன்சுடன் மொசாத் தலைவர் டேவிட் பர்னியா மார்ச் 8ஆம் தேதியன்று பேச்சு நடத்தினார்.

இதற்கு முன்னதாக திரு பர்ன்ஸ் அவ்வட்டாரத்தில் தங்கியிருப்பார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.

“இருதரப்புக்கு இடையே இடைவெளியைக் குறைத்து உடன்பாட்டை எட்டுவதற்கு சமரசப் பேச்சாளர்களுடன் தொடர்பும் ஒத்துழைப்பும் தொடர்கிறது,” என்று மொசாத் தனது அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.

இந்த அறிக்கையை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அலுவலகம் ஊடகங்களுக்கு வெளியிட்டது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பாலஸ்தீன போராளி அமைப்பான ஹமாஸ் தாக்கியதைத் தொடர்ந்து ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மூண்டது.

இந்த நிலையில் ரமலான் மாதம் தொடங்குவதற்கு முன்பு மார்ச் 10 அல்லது அதையொட்டிய தேதிகளில் சண்டை நிறுத்தம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சில நாள்களுக்கு முன்பு அதில் தொய்வு ஏற்பட்டது. இதற்கு இரு தரப்பும் ஒன்றையொன்று குற்றம்சாட்டின.

பேச்சுவார்த்தைக்காக வாரயிறுதியில் கெய்ரோவுக்கு தனது பேராளர் குழு மீண்டும் ஒருமுறை செல்வது சாத்தியமல்ல என்று ஹமாஸ் வட்டாரம் ராய்ட்டர்சிடம் கூறியிருந்தது.

எகிப்து, அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் ஜனவரி முதல் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் சமரசம் செய்து வருகின்றன.

கடந்த நவம்பரில் தற்காலிகமாக சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் 100க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகளை விடுவித்தது. இதற்கு ஈடாக இஸ்ரேல் மூன்று மடங்கு எண்ணிக்கையிலான பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்தது.

நீண்ட போர்நிறுத்தம் மற்றும் காஸாவில் உள்ள 134 பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டதற்கு இஸ்ரேலே காரணம் என்று ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இஸ்ரேல் தனது படைகளை காஸாவிலிருந்து விலக்கிக் கொள்ள மறுக்கிறது என்று அது கூறியது. ஆனால் ஹமாஸ் போராளிகளைத் தோற்கடித்தால்தான் போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் கூறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!