2023ஐ விட 2024 இன்னும் வெப்பமாக இருக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

நியூயார்க்: இவ்வாண்டு மிகவும் வெப்பமாக இருக்கும். அந்த வெப்பம் வரலாற்றில் ஆக அதிக வெப்பமான ஆண்டாகப் பதிவிடப்பட்ட 2023ஐ விட இன்னும் அதிகமாக இருக்கும் என்று அறிவியலாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

அதற்குப் பருவநிலை மாற்றம்தான் மூலக் காரணம் என்றாலும் புதைப்படிவ எரிபொருளை எரிப்பதால் வெளியாகும் வாயுக்கள் காற்றில் கலப்பதால், அது உலகளாவிய சராசரி வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது.

2023ன் வெப்பநிலை, தொழில்துறைக்கு முந்தைய காலத்தை இருந்ததைவிட 1.4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அது இந்த ஆண்டில் 1.3 டிகிரி செல்சியசிலிருந்து 1.6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வெப்பம் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தது. 2023ன் ஒவ்வொரு மாதமும் 1991-2000 வரையிலான சராசரி வெப்பத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. அதன் பின்னர் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களின் வெப்பநிலை, வரலாற்றில் அந்தந்த மாதத்திலிருந்து வெப்பநிலையைக் கடந்து இருந்தது.

கடந்த ஆண்டில் ஜூலை மாதம்தான் ஆக அதிக வெப்பமான மாதமாகவும் ஜூலை 6ஆம் தேதி ஆக வெப்பமான நாளாகவும் பதிவானது.

பசிபிக் பெருங்கடலின் வெப்பம் கிழக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதால், காற்றின் திசை மாற்றம், பெருங்கடல் வெப்பச்சலனம், மழைப்பொழிவு ஆகியவை பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார் பெருங்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ள டாக்டர் உல்லா ஹீடி.

இந்தப் பருவநிலை மாற்றங்கள் வேளாண் துறையையும் பாதிக்கக்கூடும். கிழக்கு ஆசியா, தெற்கு ஆப்பிரிக்கக் கண்டம், மத்திய அமெரிக்கா ஆகிய பகுதிகளில் காணப்படும் வறட்சியால், 2024ல் உணவு பாதுகாப்பின்மை ஏற்படலாம் என்று ஐக்கிய நாட்டு உணவு, வேளாண் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

எல் நினோ பருவநிலை மாற்றம் அமேசான் பகுதியில் வறண்ட வானிலையைக் கொண்டு வந்துள்ளது. அது தெற்கு-கிழக்கு பிரேசிலிலும் அண்டை உருகுவேயிலும் அதிக மழைப் பொழிவைக் கொண்டு வரலாம் என்றார் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் மூத்த அறிவியலாளர் டாக்டர் மைக்கல் மெக்ஃபெடன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!