காஸா எல்லை அருகே ஆகப் பெரிய ஹமாஸ் சுரங்கப் பாதை

காஸா: ஹமாஸ் அமைப்பினர் காஸாவின் வடபகுதியில் அமைத்திருக்கும் சுரங்கப்பாதை ஒன்று பெரிய கார் செல்லக்கூடிய அளவு அகலமாக இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

சுரங்கப்பாதையின் உட்பகுதியில் கான்கிரீட் பூசப்பட்டிருப்பதாகவும் உலோகக் கம்பிகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அது தெரிவித்தது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதைகளில் அது ஆகப் பெரியது என்று குறிப்பிட்ட இஸ்ரேலிய ராணுவம், அது இஸ்‌ரேலிய எல்லைக்கு நடந்து செல்லும் தொலைவில் அமைந்திருப்பதாகச் சொன்னது.

டிசம்பர் 15ஆம் தேதி, நியூயார்க் டைம்சின் செய்தியாளர்கள் இருவர் உட்பட சில நிருபர்களை ராணுவ அதிகாரிகள் அந்தச் சுரங்கப்பாதைக்கு இட்டுச்சென்றனர்.

ஹமாஸ் போராளிகளைத் துடைத்தொழிக்க இலக்கு கொண்டிருக்கும் நிலையில், தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்த்தும் விதமாக அந்தச் சுரங்கப்பாதையின் அளவும் சிக்கலான வடிவமைப்பும் இருப்பதாக ராணுவ அதிகாரிகள் கூறினர்.

இஸ்ரேலியப் படையினர் மீது படையெடுக்க ஏதுவாக காஸா முழுவதும், இணைக்கப்பட்ட சுரங்கப்பாதைகளை ஹமாஸ் அமைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க, போரின் கடுமையைக் குறைத்துக்கொள்ளும்படி உலக நாடுகள் இஸ்ரேலுக்கு நெருக்குதல் தரும் வேளையில், அந்நாட்டு ராணுவம் செய்தியாளர்களை அந்தச் சுரங்கப்பாதைக்கு அழைத்துச்சென்றுள்ளது.

பொதுமக்களின் பயன்பாட்டுக்கான கான்கிரீட் உள்ளிட்ட பொருள்களை ஹமாஸ் இத்தகைய சுரங்கப்பாதைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டதை இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் சுட்டினார்.ஆண்டுக்கணக்கில் இத்தகைய சுரங்கப்பாதைகளை ஹமாஸ் தரப்பினர் அமைத்துவந்திருப்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!