கட்–டுப்–பா–டு–க–ளைப் பின்–பற்ற மகா–தீர் அழைப்பு

மலே­சி­யா­வில் நாளுக்கு நாள் அதி­க­ரிக்­கும் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள்

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக் கொண்டே செல்­லும் நிலை­யில், கடி­ன­மாக இருந்­தா­லும் மலே­சிய மக்­கள் நட­மாட்ட கட்­டுப்­பா­டு­க­ளைப் பின்­பற்ற வேண்­டும் என்று மலே­சிய முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முக­மது அழைப்பு விடுத்­துள்­ளார்.

நேற்று அங்கு 6,806 பேர் தொற்­றுக்கு ஆளா­ன­தாக சுகா­தார அமைச்சு டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டி­ருந்­தது. 46 பேர் மாண்டனர். தொடர்ந்து இரண்­டா­வது நாளாக 6,000த்திற்­கும் மேற்­பட்ட சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

திடுக்­கி­டும் அள­வில் அதி­க­ரித்­துள்ள கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் உட­ன­டி­யா­கத் தடுக்­கப்­பட வேண்­டும் என்­றும், இந்த கடி­ன­மான கால­கட்­டத்தை மக்­கள் கடந்து வரு­வதை அர­சாங்­கம் உறுதி செய்ய வேண்­டும் என்­றும் மகா­தீர் கூறி­னார்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சங்­கி­லியை உடைக்க மலே­சி­யர்­கள் ஒரு குறிப்­பிட்ட காலத்­திற்­குத் தங்­கள் வீடு­க­ளி­லேயே இருக்க வேண்­டும், வரு­மா­னம் இல்­லா­த­வர்­

க­ளுக்கு உணவு வழங்­கப்­பட வேண்­டும் என­வும் அவர் சொன்­னார்.

"நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவை மீண்­டும் அறி­மு­கப்­ப­டுத்­து­வது சரி­யா­னது, ஆனால் அதை உட­ன­டி­யாக செயல்­ப­டுத்­து­வ­தில் நாம் தயக்­கம் காட்­டு­கி­றோம்," என்று நேற்று வெளி­யிட்ட வலைப்

பதிவு ஒன்­றில் மகா­தீர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

தடுப்­பூசி போடு­வது விரை­வுப்

படுத்­தப்­பட வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

இதற்­கி­டையே, கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பான அடுத்த நட­வ­டிக்­கை­கள் குறித்து பிர­த­மர் முகை­தீன் யாசின் இன்று ஆலோ­சனை நடத்­த­வுள்­ள­தாக உள்­ளூர் ஊட­கம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

முழு நட­மாட்டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவை நடை­மு­றைப்­ப­டுத்த வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, பேராக்­கில் கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்­துள்­ளதை அடுத்து ஈப்போ, தைப்­பிங் உள்­ளிட்ட நான்கு மாவட்­டங்­களில் நாளை முதல் ஜூன் 4ஆம் தேதி வரை கடு­மை­யான நட­மாட்ட கட்­டுப்­பாட்டு உத்­த­ரவு நடப்­பில் இருக்­கும் என்று பாது­காப்பு அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் கூறி­யுள்­ளார்.

எனி­னும் சென்ற ஆண்­டைப் போல் கடு­மை­யா­ன­தாக இல்­லா­மல், வீட்­டிற்கு ஒரு­வர் வெளியே சென்று தேவை­யான பொருட்­களை வாங்கி வர அனு­மதி உண்டு என்று கூறப்­பட்­டுள்­ளது.

மேலும் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க வெகு­ஜன பரி­சோ­தனை செய்­யு­மா­றும் தொடர்பு தட­ம­றிய மருத்­துவ மாண­வர்­க­ளைப் பயன்

படுத்­து­மா­றும் அர­சாங்­கத்தை

மலே­சிய மருத்­துவ முகமை

வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!