சிங்கப்பூரின் மதிப்புமிகு மொழிபெயர்ப்பாளரும் சமூக சேவையாளருமான ஆ. பழனியப்பன் காலமானார்

இர்­ஷாத் முஹம்­மது

மதிப்­பு­மிகு நாடா­ளு­மன்ற மொழி­பெ­யர்ப்­பா­ள­ரும் மூத்த சமூக சேவை­யா­ள­ரு­மான ஆ. பழ­னி­யப்­பன் (படம்) நேற்று மாலை அவ­ரது இல்­லத்­தில் கால­மா­னார். அவ­ருக்கு வயது 73.

நாடா­ளு­மன்­றக் கூட்­டங்­கள், வர­வு­செ­ல­வுத் திட்­டம், பிர­த­ம­ரின் தேசிய தினப் பேரணி உரை போன்ற முக்­கிய அர­சாங்க நிகழ்­வு­களில் நேரடி மொழி­பெ­யர்ப்பு, எழுத்­து­பூர்வ மொழி­பெ­யர்ப்பு, அமைச்­சு­க­ளின் புதிய சொல்­லாக்­கம் என அர­சாங்க மொழி­பெ­யர்ப்­புத் துறை­யில் கடந்த 30 ஆண்­டு­க­ளா­கப் பல்­வேறு பணி­களை ஆற்­றி­யி­ருக்­கும் திரு பழ­னி­யப்­பன் நாடா­ளு­மன்­றத்­தின் மொழிச் சேவை­கள் பிரி­வுத் தலைமை வல்­லு­ந­ராக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்­வு­பெற்­றார்.

பின்­னர் சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர், தேசிய கல்­விக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர் எனக் கல்­வி­யா­ள­ரா­கப் பணி­பு­ரிந்த அவர் தனிப்­பட்ட மொழி பெயர்ப்­புச் சேவை­யை­யும் நடத்­தி­வந்­தார்.

தேசிய மொழி­பெ­யர்ப்­புக் குழு­வின் தமிழ்­மொ­ழி­வ­ளக் குழு­வின் தலை­வர், வளர்தமிழ் இயக்க செயற்­குழு உறுப்­பி­னர் எனத் தமிழ்­மொழி சார்ந்த பணி­களை ஆற்­றிய அவர் சமய, சமூ­கத் துறை­க­ளி­லும் பங்­காற்­றி­யுள்­ளார்.

சிங்­கப்­பூர் தமிழ் இளை­யர் மன்­றத்­தில் 1967ல் இருந்து 1982 வரை உறுப்­பி­ன­ராக இருந்த திரு பழ­னி­யப்­பன், தன்னை முன்­னி­லைப்­ப­டுத்­தாத தன்­ன­ல­மற்ற சமூ­கப் பணி­யா­ளர் என்று அவ­ரது பள்­ளிக்­கால நண்­ப­ரான முனை­வர் அ. வீர­மணி கூறி­னார்.

எல்­லா­ரை­யும் அர­வ­ணைத்­துச் செல்­லும் பன்­மு­கத் திற­னா­ள­ரான திரு பழ­னி­யப்­ப­னின் மறைவு சிங்­கப்­பூர் தமிழ்ச் சமூ­கத்­திற்­குப் பேரிழப்பு என சமூ­கத்­தலை­வர்­கள் பல­ரும் வருத்­தம் தெரி­வித்­த­னர்.

“சிங்­கப்­பூர் தமிழ்ச் சமூ­கம் அதன் முக்­கிய அங்­கத்­தி­னர் ஒரு­வரை இழந்து­விட்­டது,” என்­றார் மூத்த தமி­ழ­றி­ஞ­ரான டாக்­டர் சுப. திண்­ணப்­பன்.

“1982ல் நான் சிங்­கப்­பூர் வந்­தது முதல் பழ­னி­யப்­ப­னு­டன் அணுக்­க­மான நட்பு இருந்­தது. யாருக்­கும் இல்லை என்று சொல்­லா­மல் உத­வும் நல்­லுள்­ளம் படைத்­த­வர் அவர். சிங்­கப்­பூ­ரில் தமிழ்க் கலைச் சொற்­களை உரு­வாக்கி தமிழ் அக­ரா­தியை உரு­வாக்­கி­ய­தில் முதன்­மைப் பணி­யாற்­றி­ய­வர்,” என்­றார் அவர்.

“திரு பழ­னி­யப்­பன் தலை­மை­யி­லான குழு தயா­ரித்த சொல்­வ­ளக் கையேட்டை இன்­றும் வளர் தமிழ் இயக்க வலைத்­தளத்­தில் காண­லாம்.

என்­னைப் போன்­றோர் அவ­ரின் தேசிய நாள், நாடா­ளு­மன்ற நேர­டித் தமிழ் மொழி­பெ­யர்ப்­பு­க­ளைக் கேட்­டுத்­தான் வளர்ந்­தோம்,” என்று வளர்­த­மிழ் இயக்­கத்­தில் அவ­ரோடு பணி­பு­ரிந்த காலத்தை நினை­வு­கூர்ந்­தார் இயக்­கத்­தின் முன்­னாள் தலை­வர் ஆர். ராஜா­ராம்.

செய்தி மொழி­பெ­யர்ப்­பு­டன் இலக்­கிய மொழி­பெ­யர்ப்­பி­லும் ஈடு­பாடு கொண்­டி­ருந்த திரு பழ­னி­யப்­பன், முன்­னாள் அதி­பர் எஸ்.ஆர். நாத­னின் ஆங்­கில நூலைத் தமி­ழில் ‘உழைப்­பின் உயர்வு’ என்ற தலைப்­பில் மொழி­யாக்­கம் செய்­துள்­ளார். பல்­வேறு தமிழ்க் கவி­தை­கள், சிறு­க­தை­களை ஆங்­கி­லத்­தில் மொழி­பெ­யர்த்­துள்­ளார்.

ஒரு காலகட்டத்தில் சிங்கப்பூரின் தமிழ்மொழி சார்ந்த பெரும்பாலான குழுக்களில் அவர் இடம்பெற்றிருந்தார்.

சமூக மன்­றம், வசிப்­போர் குழு என சமூ­கப் பணி­க­ளி­லும் நீண்டகாலம் சேவை புரிந்­துள்ள திரு பழ­னி­யப்­பன் திரு­ம­ணப் பதி­வா­ள­ராக ஆயி­ரக்­க­ணக்­கான திரு­ம­ணங்­களை தமி­ழில் உறு­தி­மொழி எடுக்க வைத்து நடத்­தி­ய­வர்.

இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் செய­லா­ள­ராக 1980களில் அவர் பணி­யாற்­றி­னார். கிருஷ்­ணன் கோயில் உறுப்­பி­ன­ரா­க­வும் பணி­யாற்­றிய அவர், சிங்­கப்­பூர் கோயில் குட­மு­ழுக்கு விழாக்­கள் பல­வற்­றி­லும் முக்­கிய அறி­விப்­பா­ள­ரா­கப் பணி­பு­ரிந்­த­வர். அவ­ரது கட்­டுரை இடம்­பெ­றாத குட­மு­ழுக்கு மலர்­களே இல்லை என­லாம். “திரு­முறை மாநாட்­டின் தூணாக விளங்­கி­ய­வர் பழ­னி­யப்­பன்,” என்று புக­ழா­ரம் சூட்­டி­னார் டாக்­டர் சுப. திண்­ணப்­பன்.

திரு பழ­னி­யப்­பன், இணை­யத்­தில் தமிழை முன்­னெ­டுத்த முன்­னோ­டி­களில் ஒரு­வர். தமிழ் இணைய மாநாடு உள்­பட பல்­வேறு மாநா­டு­கள், கருத்­த­ரங்­களில் தொழில்­நுட்­பத் தமிழ் குறித்த கட்­டு­ரை­க­ளைப் படைத்­துள்­ளார். வலைப்பூ, வலைப்­பக்­கங்­க­ளி­லும் எழு­தி­யுள்­ளார்.

“இப்­போது நான் செய்­து­வ­ரும் பல பணி­க­ளுக்கு அடித்­த­ளம் அமைத்­த­வர் அவர்்,” என்று கண்­ணீர் மல்கக் கூறினார் திரு பழ­னி­யப்­ப­னு­டன் நாடாளு­மன்­றத்­தில் பணி­யாற்­றிய அர­சாங்க ஊழி­யர் எஸ்.என்.வி. நாரா­ய­ணன், 39.

நாடாளுமன்றத்தின் முன்னோடி தமிழ் மொழிப்பெயர்ப்பாளர் என்பதற்கு மேலாக அவர் எதார்த்தமாகப் பேசும் நல்ல நண்பரும் கூட என்று திரு பழனியப்பனுக்கு ஃபேஸ்புக் பக்கத்தில் அஞ்சலி செலுத்தினார் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின்.

திரு பழ­னி­யப்­பன், மனைவி, இரு மகன்­கள், மகள், ஒரு பேரக்­கு­ழந்­தையை விட்­டுச் சென்­றுள்­ளார். அவ­ரது நல்­லு­டல் புளோக் 117 பீஷான் ஸ்தி­ரீட் 12 #23-29 எனும் முக­வ­ரி­யில் அஞ்­ச­லிக்­காக வைக்­கப்­பட்­டுள்­ளது. அவரது இறு­திச் சடங்­கு­கள் இன்று நடை­பெ­றும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!