புதிய அமைச்சுகள் நிலைக் குழு

இளையர்களிடையே போதைப்பொருள் புழக்கத்தைக் கண்காணித்துத் தடுக்க நடவடிக்கை

சிங்­கப்­பூர் இளை­யர்­க­ளி­டையே போதைப்­பொ­ருள் புழக்­கத்­தைக் கண்­கா­ணித்­துத் தடுக்க உத­வும் புதிய குழு அமைக்­கப்­ப­ட­வி­ருக்­கிறது.

உள்­துறை, சட்ட அமைச்­சர் கா. சண்­மு­கம் அத­னைத் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­க­ளுக்கு இடையே போதைப்­பொ­ரு­ளைப் பயன்­ப­டுத்­தத் தொடங்­கும் சரா­சரி வயது 15.9 என்று மன­ந­லக் கழ­கம் அண்­மை­யில் நடத்­திய ஆய்­வில் தெரி­ய­வந்­த­தைத் தொடர்ந்து அர­சாங்­கம் அந்­தக் கண்­காணிப்­புக் குழுவை அமைக்க இருக்­கிறது.

போதைப்­பொ­ருள் புழக்­கத்­தி­லி­ருந்து மீண்டு வர உத­வும் ‘பெர்த்தா­பிஸ்’ மறுவாழ்வு இல்­லத்­திற்­குச் சென்­றி­ருந்­த­போது அமைச்­சர் அந்­தத் தக­வலை வெளி­யிட்­டார்.

மறுவாழ்வு இல்­லத்­தில் இருப்­போ­ருக்­கான திறன் பயிற்­சித் திட்­டத்தை அவர் தொடங்கி­வைத்­துப் பேசி­னார்.

“போதைப் பொருள் புழக்­கத்­தைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­களில் கவ­னம் செலுத்த வேண்­டும். வீடு­களில் பெற்­றோர் மூல­மும் பள்­ளி­கள், சமு­தா­யம், தேசிய சேவை எனப் பல்­வேறு முனை­க­ளி­லும் இதனை அணுக வேண்­டும்,” என்று அமைச்­சர் கூறி­னார்.

இளை­யர்­க­ளி­டையே போதைப்­பொ­ருள் புழக்­கத்­தைத் தடுக்­கும் அமைச்­சு­கள் நிலைக் குழு­விற்கு அமைச்­சர் சண்­முகம் தலைமை வகிப்­பார்.

குழு­வில் கல்வி அமைச்சு, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு, கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்சு, தற்­காப்பு அமைச்சு, தொடர்பு, தக­வல் அமைச்சு, சுகா­தார அமைச்சு ஆகி­ய­வற்­று­டன் மக்­கள் கழ­க­மும் இணைந்து செயல்­படும்.

அந்த அமைச்­சு­க­ளின் மூத்த துணை­ய­மைச்­சர்­கள், துணை­ய­மைச்­சர்­கள், மூத்த நாடா­ளு­மன்ற செய­லா­ளர்­கள் என ஏழு பேர் அதில் இடம்­பெற்­றி­ருப்­பர். இளை­யர்­கள் இடை­யி­லான போதைப்­பொ­ருள் புழக்­கப் பிரச்­சி­னை­யைக் கையாள்­வ­தன் தொடர்­பில் அர­சாங்­கத்தை முழு­மை­யாக உள்­ள­டக்­கிய நட­வ­டிக்­கை­களில் குழு கவ­னம் செலுத்­தும்.

இந்த ஆண்­டின் மூன்­றாம் காலாண்­டில் அக்­குழு செயல்­படத் தொடங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

செய்­தி­யா­ளர்­க­ளின் கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கை­யில் அமைச்­சர் சண்­மு­கம், “போதைப்­பொ­ருள் புழக்­கம் தீவி­ர­மான பிரச்­சினை என்­பது சிங்­கப்­பூ­ரர்­களில் பெரும்­பா­லா­னோ­ருக்­குத் தெரிந்­தி­ருக்­கிறது. அதை மேலும் வலி­யு­றுத்த வேண்­டும். இளை­யர்­க­ளை­யும் அணுக வேண்­டும்,” என்று குறிப்­பிட்­டார்.

தாய்­லாந்­தில் கஞ்சா சட்ட அங்­கீ­கா­ரம் பெற்­றி­ருப்­ப­தை­யும் மலே­சியா போதைப்­பொ­ருள் கடத்­த­லுக்கு மரண தண்­ட­னையை நீக்­கி­யி­ருப்­ப­தை­யும் சுட்­டிய செய்­தி­யா­ளர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு அத­னால் சவால்­கள் அதி­க­ரிக்­குமா என்று கேட்­ட­னர். வட்­டார அள­வில் மட்­டு­மன்றி பொது­வா­கவே சவால்­கள் அதி­க­ரிப்­ப­தாக அமைச்­சர் பதி­ல­ளித்­தார்.

‘பெர்த்தா­பிஸ்’ மறுவாழ்வு இல்­லத்­தின் புதிய மறு­வாழ்­வுத் திட்­டம், அங்­குள்­ளோ­ருக்கு சிகிச்சை அளிப்­ப­தோடு வேலைத் திறன் பயிற்சி­யும் வழங்­கும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

உள­வி­யல் ரீதி­யா­க­வும் திறன் மேம்­பாடு மூல­மா­க­வும் அவர்­களை வேலைக்­குத் தயார்ப்­ப­டுத்த அத்­திட்­டம் கைகொ­டுக்­கும்.

அந்த மறுவாழ்வு இல்­லத்­தில் ஏறத்­தாழ 90 பேர் உள்­ள­னர். போதைப்­பொ­ருள் தொடர்­பான குற்­றங்­களில் இரண்டு அல்­லது அதற்கு மேற்­பட்ட முறை ஈடு­பட்ட அவர்­கள் 30 வய­துக்­கும் 70 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

அவர்­கள் வேலைத் திறன்­க­ளைக் கற்­றுக்­கொண்டு வேலை­யில் ஈடு­படு­வ­தன் மூலம் மீண்­டும் குற்­றச்செயல்­களில் ஈடு­ப­டா­மல் தடுக்க இய­லும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!