‘இனவாதத் தூண்டுதல் இம்மியும் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது’

இனம், சம­யம் ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் பேதங்­க­ளைத் தூண்­டு­வோ­ரின் நட­வ­டிக்­கை­களைத் தமது அர­சாங்­கம் பொறுத்­துக்­கொள்­ளாது என்று மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் (படம்) எச்­ச­ரித்­துள்­ளார்.

நாட்­டின் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தைத் தொடர்ந்து பாது­காக்­க­வும் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய அர­சாங்­கத்தை வழி நடத்­த­வும் அவர் உறு­தி­ய­ளித்­தார்.

இருப்­பி­னும் நாளை நடை­பெ­ற­வி­ருக்­கும் பேர­ணியைத் தடை­செய்­வது குறித்­துத் திரு அன்­வார் ஏதும் கருத்­து­ரைக்­க­வில்லை.

மலாய்க்­கா­ரர்­கள் ஒடுக்­கப்­படு­வ­தா­கச் சொல்­லும் சில குழுக்­கள், தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் அந்­தப் பேர­ணிக்கு ஏற்­பாடு செய்­துள்­ளன.

“அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய நாடு என்று நம்­மைப் பற்­றிச் சொல்­கி­றோம். எனவே பொறுப்­பற்ற அறிக்­கை­களை ஏற்­றுக்­கொள்ள இய­லாது,” என்று கூறிய பிர­த­மர் அன்­வார், மலே­சியா அமை­தி­யான நாடாக இருக்­க­வேண்­டி­யது முக்­கி­யம் என்­றார்.

சட்­டம் ஒழுங்கு பின்­பற்­றப்­ப­ட­வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார். “மலாய்க்­கா­ரர்­கள், சீனர்­கள், இந்­தி­யர்­கள், இதர இனத்­தி­னர் சேர்ந்தே மலே­சி­யாவை உரு­வாக்­கி­யுள்­ள­னர். இந்த நிலையை ஒரு­போ­தும் விட்­டுத்­தர இய­லாது,” என்­றார் அவர்.

நாட்­டில் இனம் அல்­லது சம­யத்­தின் அடிப்­ப­டை­யி­லான பதற்­றத்­தைத் தூண்­டும் சக்­தி­க­ளுக்கு அனு­மதி இல்லை என்று மலே­சி­யப் பிர­த­மர் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

பாது­காப்பு அமைப்­பு­களை விழிப்பு நிலை­யில் இருக்­கும்­படி உத்­த­ர­விட்­டி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

“அச்­சு­றுத்­த­லுக்கு ஆளா­ன­தா­கத் தங்­க­ளைக் கரு­திக்­கொள்­வோர் இன, சமய ரீதி­யி­லான உணர்­வு­க­ளைப் பயன்­ப­டுத்தி மக்­க­ளைத் தூண்­டி­விட முனை­வர். இதன் விளை­வு­கள் ஏழை, எளிய மக்­க­ளையே அதி­கம் பாதிக்­கும்,” என்று திரு அன்­வார் சொன்­னார்.

நாளை நடை­பெ­ற­வி­ருக்­கும் பேர­ணி­யில் முக்­கிய உரை­யாற்­று­வோ­ரில், முன்­னாள் பிர­த­மர் டாக்­டர் மகா­தீர் முக­ம­தும் ஒரு­வர்.

மலாய்க்­கா­ரர்­கள் தொடர்­பான விவ­கா­ரங்­கள் குறித்து அதில் கலந்­து­ரை­யா­டப்­படும் என்று ‘ஃபிரீ மலே­சியா டுடே’ செய்தி இணை­யத்­த­ளம் தக­வல் வெளி­யிட்­டுள்­ளது.

மலே­சி­யா­வின் இளை­யர், விளை­யாட்­டுத் துறை­யின்­கீழ் செயல்­படும் ‘இம்­பேக்ட் மலே­சியா’ அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருந்த நிகழ்ச்சி ஒன்று பலத்த விமர்­ச­னத்­திற்கு உள்­ளா­னது குறித்­தும் திரு அன்­வார் கருத்­து­ரைத்­தார்.

கருத்து வேற்­றுமை எது­வா­யி­னும் அதைப் பேசித் தீர்த்­துக்­கொள்­வதே சரி­யான வழி என்­றார் அவர். அந்த நிகழ்ச்சி, முஸ்­லிம் அல்­லா­தோரை இஸ்­லாத்­திற்கு மத­மாற்­றம் செய்ய அர­சாங்­கம் செய்­யும் முயற்­சி­க­ளின் ஓர் அங்­கம் என்ற விமர்­ச­னம் எழுந்­தது.

மலே­சி­யா­வில் இஸ்­லாம் அல்­லாத மற்ற சம­யங்­க­ளைச் சார்ந்­தோர் அவ­ர­வர்க்கு விருப்­ப­மான சம­யங்­க­ளைப் பின்­பற்­று­வ­தற்கு உரிமை உண்டு என்று திரு அன்­வார் குறிப்­பிட்­டார்.

கருத்து வேற்­றுமை ஏற்­பட்­டால் தவ­றான ஊகங்­க­ளை­யும் தவ­றான எண்­ணங்­க­ளை­யும் தவிர்த்து, சுமு­க­மான முறை­யில் தீர்­வு­காண வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

மலே­சிய இளை­யர், விளை­யாட்­டுத் துறை சம­யங்­க­ளுக்கு இடை­யி­லான புரி­த­லை­யும் மரி­யா­தை­யை­யும் ஊக்­கு­விக்­கும் நோக்­கில் ‘ஜோம் ஸியாரா’ எனும் நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

அதன்­கீழ் பல்­வேறு சம­யங்­க­ளின் வழி­பாட்­டுத் தலங்­களை நேரில் சென்று காண ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. அதில் முஸ்­லிம்­கள் யாரும் பங்­கேற்­க­வில்லை என்று இளை­யர், விளை­யாட்­டுத் துறை அமைச்­சர் ஹன்னா இயோ தெளி­வு­ப­டுத்­தி­னார்.

அந்­நி­கழ்ச்சி அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கு­தலை நோக்­க­மா­கக் கொண்­டது என விளக்­கம் அளிக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!