உயரம் சார்ந்த பள்ளி நடவடிக்கைகள் தொடங்கின

பொன்­மணி உத­ய­கு­மார்

பள்ளி முகாம் நட­வ­டிக்­கை­யின்­போது நேர்ந்த விபத்­தில் உயர்­நிலைப் பள்ளி மாண­வர் ஒரு­வர் மாண்­ட­தால் கடந்த ஈராண்­டு­களாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த உய­ரம் சார்ந்த நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் தொடங்­கப்­பட்­டுள்­ளன.

உய­ரம் சார்ந்த நட­வ­டிக்­கை­களைத் தொடங்­கிய பள்­ளி­களில் ஒன்­றான கான் எங் செங் பள்ளி, ஜாலான் பத்­தேரா வெளிப்­புற சாக­சக் கற்­றல் நிலை­யத்­தில் முகாம் நடத்தி வரு­வதை நேற்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் பார்­வை­யிட்­டார். வெவ்­வேறு உய­ரம் சார்ந்த நட­வ­டிக்­கை­களில் சுமார் 80 உயர்­நிலை மூன்று மாண­வர்­கள் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

இவ்­வாறு உய­ரம் சார்ந்த நட­வடிக்­கை­களில் மேம்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு நடை­மு­றை­களும் இருப்­ப­தாக கல்வி அமைச்சு தெரி­வித்­தது.

இதன்­படி, வழக்­க­மான செயல்­பா­டு­களில் பாதி அளவு ஆற்­ற­லுடன் மட்­டுமே நிலை­யத்­தின் உய­ரம் சார்ந்த நட­வ­டிக்கை மையங்­கள் செயல்­படும்.

இத­னால் ஒவ்­வொரு நட­வ­டிக்­கை­யி­லும் பங்­கேற்­ப­தற்கு மாண­வர்­கள் கூடு­தல் நேரம் பெறு­வர் என்­றது அமைச்சு.

இவ்­வாறு பாதி­ய­ள­வி­லான செயல்­பா­டு­கள் மார்ச் 31 வரை தொட­ரும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. நட­வ­டிக்­கை­களை நடத்­தும் பயிற்­சி­யா­ளர்­க­ளுக்­கான புதிய தரச்­சான்று நிபந்­தனை சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக கல்வி அமைச்­சின் தலை­மை­ய­கத்­தைச் சேர்ந்த முதன்மை வெளிப்­புற சாக­சக் கல்­வி­யா­ள­ரான 53 வயது குவாங் யோக் வீ தெரி­வித்­தார்.

பாது­காப்­புக் கயி­று­கள் போன்ற பொருள்­களை மாண­வர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு முன், முழு­மை­யான பாது­காப்­புப் பரி­சோ­த­னை­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தாக பயிற்­சி­யா­ளர்­கள் ஒப்­பு­தல் தெரி­வித்­துக் கையெ­ழுத்­தி­டு­வது போன்ற நடை­மு­றை­க­ளால் பொறுப்­பேற்­புத்­தன்மை அதி­க­ரித்­துள்­ளது.

பயிற்­சி­யா­ளர்­க­ளு­டன் பள்ளி ஆசி­ரி­யர்­களும் பாது­காப்பு நடை­மு­றை­களை அமல்­ப­டுத்த உத­வு­வர்.

பாது­காப்­புக்­கான பொருள்­கள் சரி­யாக இயங்­கு­வ­து­டன் தொழில்­துறை தர­நி­லைக்­கேற்ப இருப்­பதை ஒவ்­வொரு காலாண்­டி­லும் உறு­தி­செய்ய முயற்­சி­கள் எடுக்­கப்­படும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

உய­ரம் சார்ந்த பள்ளி நட­வடிக்­கை­கள் மீண்­டும் தொடங்கி­விட்ட நிலை­யில் தாங்­கள் பெரி­தும் உற்­சா­கம் அடைந்­துள்­ள­தா­க­வும் புதிய வகுப்பு நண்­பர்­க­ளு­டன் உறவை வலுப்­ப­டுத்­திக்­கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்­பாக அமைந்­துள்­ள­தா­க­வும் மாண­வர்­கள் கூறி­னர்.

பள்ளி முகா­மின்­போது உய­ரம் சார்ந்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட இருப்­ப­தாக அறிந்­து­கொண்ட உயர்­நிலை மூன்று மாண­வர் முக­மது இர்­பான், தான் உற்­சா­கம் அடைந்­த­தா­கப் பகிர்ந்­து­கொண்­டார். நண்­பர்­க­ளு­டன் பங்­கேற்ற இந்த மூன்று நாள் முகாம் சிறப்­பாக இருந்­தது என்­றும் அமைச்­ச­ரு­டன் கலந்­து­ரை­யா­டி­யது தனக்கு மகிழ்­வூட்­டி­யது என்­றும் அவர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!