போதகருக்கு அனுமதி மறுப்பு: இந்தோனீசியாவில் ஆர்ப்பாட்டம்

இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்த இஸ்­லா­மிய சம­யப் போத­க­ரான அப்­துல் சொமாட் பத்­து­பாரா, தீவி­ர­வா­தக் கொள்­கை­க­ளைக் கொண்­ட­வ­ராக இருப்­ப­தால் சிங்­கப்­பூ­ருக்கு வர அவ­ருக்கு அண்­மை­யில் அனு­மதி மறுக்­கப்­பட்­டது.

இதைக் கண்­டித்து இந்­தோனீ சியத் தலை­ந­கர் ஜகார்த்­தா­வி­லும் மேடா­னி­லும் வெள்­ளிக்­கி­ழமை அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் பலர் திரண்டு அதி­ருப்­திக் குரல் எழுப்­பி­னர்.

மேடா­னில் கிட்­டத்­தட்ட 250 பேர் அங்­குள்ள பிர­தான பள்­ளி­வா­ச­லில் ஒன்று திரண்டு பிறகு சிங்­கப்­பூர் தூத­ர­கத்தை நோக்­கிச் சென்­ற­னர்.

சிங்­கப்­பூர் தூத­ர­கத்­துக்கு முன் நின்­று­கொண்டு சிங்­கப்­பூ­ருக்கு எதி­ரான வாச­கங்­க­ளைக் கொண்ட பதா­கை­களை அவர்­கள் உயர்த்­திப் பிடித்­த­னர்.

ஆர்ப்­பாட்­டம் நடந்த இடத்­தில் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக 900 காவல்­துறை அதி­கா­ரி­கள் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் மேடான் காவல்­து­றைத் தலை­வர் வெலண்­டினோ ஆல்ஃபா டாட்­டா­ரேடா தெரி­வித்­தார்.

நிலைமை தங்­கள் கட்­டுக்­குள் இருந்­த­தா­க­வும் அவர் கூறி­னார்.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளின் பிர­தி­நி­தி­களும் மேடான் நக­ரைச் சேர்ந்த முக்­கிய இஸ்­லா­மிய போத­க­ரும் சிங்­கப்­பூர் தூத­ரைச் சந்­தித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

தலை­ந­கர் ஜகார்த்­தா­வில் ஏறத்­தாழ 50 பேர் சிங்­கப்­பூர் தூத­ர­கத்­துக்கு முன் நின்று தங்­கள் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­னர்.

இத­னி­டையே, இது­பற்றி கருத்து தெரி­வித்த சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர், இந்­தோனீ­சிய தூத­ரக நில­வ­ரங்­களைச் சிங்­கப்­பூர் அர­சு அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தா­கக் கூறினார்.

இந்­தோ­னீ­சிய சம­ய போத­கர் அப்­துல் சொமாட் பத்­து­பாரா சிங்­கப்­பூர் வர இம்­மா­தம் 16ஆம் தேதி அனுமதி மறுக்கப்­பட்­டது. இந்த விவகா­ரம் பற்றி தன்­னு­டைய நிலையை விளக்கி அடுத்த நாள் சிங்­கப்­பூர் உள்­துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது.

சிங்­கப்­பூ­ருக்­குள் வர ஒரு­வருக்கு அளிக்­கப்­படும் அனு­மதி என்­பது தானா­கவே கிடைத்­து­விடாது. அது அவ­ரின் உரி­மை­யும் அல்ல. ஒவ்­வொரு விண்­ணப்­ப­மும் அதன் அதன் அடிப்­ப­டை­யில் மதிப்­பீடு செய்யப்படும்.

வன்­செ­யல் அல்­லது தீவி­ர­வாத மற்­றும் பிரி­வி­னை­வா­தப் போதனையை யார் ஆத­ரித்­தா­லும் அதை சிங்­கப்­பூர் அர­சாங்­கம் கடு­மை­யான ஒன்­றாக கரு­து­கிறது என்று பேச்­சா­ளர் விளக்­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!