திரைச்செய்தி

நெற்றியில் திருநீறு, கழுத்தில் மாலை சகிதமாக காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த படங்களை வெளியிட்டு இருக்கிறார் தமன்னா.
அம்பானி வீட்டுத் திருமணத்தின் இரண்டாம் நாளில் மூன்று சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடனம் ஆடிய காணொளி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
ஜப்பான் நாட்டை உண்மையில் காதலிப்பதாகவும் இனி ஒவ்வோர் ஆண்டும் அங்கு செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.
செஃப் வெங்கடேஷ் பட்டுடன் குக் வித் கோமாளியில் இருந்து விலகுவதாக செஃப் தாமுவும் பதிவிட்டு பின்னர் அதை நீக்கியது குறித்து வெங்கடேஷ் பட் ‘சொல் தவறினாலும் நட்பு மாறாது’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
நடிகர் விஜய்யை வைத்து ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பெயரில் படம் எடுப்பேன் என்று இயக்குநர் அட்லி கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.