சீன எல்லைப் பிரச்சினையைப் பேசியதால் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையிலெடுத்துள்ளது: கனிமொழி

தூத்துக்குடி: சீன எல்லைப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் மத்தியில் ஆளும் பாஜக அரசு கச்சத்தீவு விவகாரத்தை திசைதிருப்பும் அரசியலாகக் கையில் எடுத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் இருந்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில் திங்கட்கிழமை (ஏப்ரல் 8) காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தூத்துக்குடியில் திமுக வெற்றி உறுதி. இத்தனை ஆண்டு காலம் நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பியபோதெல்லாம் அமைதி காத்த பாஜகவுக்குத் தேர்தல் வந்துவிட்டதாலும், சீன எல்லைப் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்புவதாலும் கச்சத்தீவு பிரச்சினை நினைவுக்கு வந்துவிட்டது,” என்று சாடியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட, தமிழகத்தில் இதுதொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. கச்சத்தீவை யார் தாரைவார்த்தது என்ற விவாதங்களுக்கு மத்தியில் அதை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.

“கச்சத்தீவை தாரைவார்த்தது, இலங்கைத் தமிழர்கள் படுகொலையை வேடிக்கை பார்த்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசுதான். அதை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் அவர்களால் எடுக்கப்படவில்லை. இலங்கையில் போர் நடைபெற்றபோது பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசுதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால், இவர்களால் இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முடியவில்லை. அதற்கான முயற்சிகளையும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மேற்கொள்ளவில்லை,” என எதிர்க்கட்சிகள் கச்சத்தீவு மற்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கருத்து தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே, “கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பது குறித்து இந்தியாவில் இருந்து வெளியாகும் தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை,” என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இந்நிலையில், சீன எல்லைப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர்தான் மத்தியில் ஆளும் பாஜக அரசு கச்சத்தீவு விவகாரத்தை திசை திருப்பும் அரசியலாகக் கையில் எடுத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!