தலையில் கரும்பு, மிதிவண்டியில் சீர்வரிசைப் பொருள்கள்: 80 வயதில் 17 கிலோமீட்டர் சென்று மகளுக்கு சீர் கொடுத்த தந்தை

புதுக்கோட்டை: மகளுக்கு பொங்கல் சீர் கொடுப்பதற்காக கரும்புடன் மிதிவண்டியில் 17 கிலோ மீட்டர் தூரம் பயணம் சென்ற விவசாயியின் செயல் புதுக்கோட்டை மக்களை வியக்க வைத்துள்ளது.

அம்மாவட்டத்திலுள்ள கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லத்துரை. 80 வயதான இவருக்கு அமிர்தவள்ளி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

திருமணமான 12 ஆண்டுகளுக்குப் பிறகே இவரது மகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அப்போது முதல் மகளுக்குத் தவறாமல் பொங்கல் சீர் அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் செல்லத்துரை.

இதையடுத்து, தனக்கு 80 வயதானபோதும் மிதிவண்டியில் மகளுக்காக பொங்கல் சீர்வரிசையுடன் புறப்பட்டார் செல்லத்துரை. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது மிதிவண்டியில் தேங்காய், பழம், மஞ்சள்கொத்து, வேட்டி, துண்டு, பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுடன் செல்லத்துரை புறப்பட்டார்.

17 கிலோமீட்டருக்கு அப்பால் வசிக்கும் தனது மகளின் வீட்டிற்கு மிதிவண்டியிலேயே செல்வது என முடிவெடுத்த அவர் பெரிய அளவில் உள்ள மூன்று கரும்புகளை தன் தலையில் வைத்துக்கொண்டு மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்டார். சாலையில் அவரைக் கண்டு வியந்த பொதுமக்கள் பலரும் தங்கள் கைப்பேசியில் அவரைப் படம் பிடித்தனர்.

பாரம்பரியத்தை மறக்காத செல்லத்துரைக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!