சட்டப் பேரவையில் 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றம்

சென்னை: ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் சட்டப் பேரவையில் சனிக்கிழமை மீண்டும் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள், தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்திவைப்பதாக குறிப்பிட்டு, அவற்றை ஆளுநர் ஆர்.என். ரவி நவம்பர் 13ஆம் தேதி திருப்பி அனுப்பினார்.

அதனைத் தொடர்ந்து, இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில், 10 மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றித் தருமாறு அந்தந்த துறை அமைச்சர்கள் முன்மொழிந்தனர்.

சட்டப்பேரவையில் இருந்து பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், 10 மசோதாக்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மசோதா, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக மசோதா, வேளாண்மைப் பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் இரண்டாவது திருத்த மசோதா, தமிழ் பல்கலைக் கழக இரண்டாவது திருத்த மசோதா, மீன்வள பல்கலைக் கழக மசோதா, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா ஆகியவை மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!