பர்மிங்ஹம்: யூரோப்பா கான்ஃபரன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான ஆஸ்டன் வில்லா.
போலந்தின் லெகியா வார்சாவை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது வில்லா. மூசா டியாபி, அலெக்ஸ் மொரேனோ இருவரும் வில்லாவின் கோல்களைப் போட்டனர்.
வெற்றியைத் தொடர்ந்து வில்லா ‘இ’ பிரிவில் முதலிடத்தை வகிக்கிறது.
இந்த ஆட்டம் வில்லாவின் வில்லா பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு வெளியே லெகியா வார்சாவின் ரசிகர்கள் காவல்துறையினருடன் மோதியதால் அவர்கள் விளையாட்டரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை.
அச்சம்பவத்தில் குறைந்தது மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததாகவும் சுமார் 39 ரசிகர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.