தொடர் தோல்வியால் துவண்டுள்ள ஜெர்மனி

வியன்னா: ஜெர்மன் காற்பந்து அணிக்கு கடந்த இரண்டு ஆண்டுகள் சரியாக அமையவில்லை. தொடர் தோல்விகளால் அந்த அணி துவண்டுள்ளது.

செவ்வாய்க் கிழமை இரவு ஆஸ்திரியாவுக்கு எதிரான நட்பு ஆட்டத்திலும் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இந்த ஆண்டை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கிய ஜெர்மனி அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆட்டத்தின் 29, 73வது நிமிடங்களில் ஆஸ்திரியா கோல் அடித்தது. 

49வது நிமிடத்தில் ஜெர்மனியின் நட்சத்திர வீரர் லிராய் சானேவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. அது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை தந்தது. 

அதனால் ஜெர்மனியால் கோல் ஏதும் அடிக்கமுடியவில்லை.

தற்போது யூரோ கிண்ணத்திற்கான தகுதி ஆட்டங்கள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பல ஐரோப்பிய அணிகள் தங்கள் முழு பலத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் ஜெர்மனி செய்வது அறியாமல் நிற்கிறது. 

2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜெர்மனி யூரோ கிண்ணத்தை நடத்துகிறது.  போட்டியை ஏற்று நடத்துவதால் ஜெர்மன் அணிக்கு இது கூடுதல் நெருக்கடியை தந்துள்ளது.

வரும் நாட்களில் ஜெர்மன் அணியிலும் நிர்வாகத்திலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று காற்பந்து கவனிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!