எதிர்காலம் பற்றி யோசிக்கவில்லை: டிராவிட்

அகமதாபாத்: இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடருடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக டிராவிட்டின் ஒப்பந்தம் முடிவடைந்தது.

ஈராண்டு ஒப்பந்தத்தின்கீழ் 2021ஆம் ஆண்டு நவம்பரில் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பை ராகுல் டிராவிட் ஏற்றுக்கொண்டார்.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதன்பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தோல்வி குறித்தும் அவரின் எதிர்காலத்தைப் பற்றியும் டிராவிட் பேசினார்.

“பயிற்றுநர் ஒப்பந்தத்தை நீட்டிப்பதா அல்லது பதவியில் இருந்து விலகுவதா என்பது குறித்து நான் இதுவரை யோசிக்கவில்லை. உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தோற்றுவிட்டோம். அதுகுறித்து எதையும் யோசிக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும்போது அது பற்றிச் சிந்திப்பேன்,” என்றார் டிராவிட்.

“இதுவரை உலகக் கிண்ணத் தொடரில் மட்டுமே எங்களின் கவனம் இருந்தது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றி தெரியவில்லை. எனது பணியை நானே மதிப்பிட விரும்பவில்லை. இந்திய அணி வீரர்களுடன் பணியாற்றியது பெருமைமிக்க தருணம்,” என்று டிராவிட் குறிப்பிட்டார்.

“டி20 உலகக் கிண்ணப் போட்டியில் அரையிறுதி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இப்போது 50 ஓவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டி என முக்கியமான தொடர்களில் அடுத்தடுத்து தோல்வியடைந்ததற்கு ஒரே ஒரு காரணம் மட்டும் இல்லை. இந்த மூன்று தோல்விகளில் இருந்தும் நான் நிர்வாகியாக இருந்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை, மூன்று போட்டிகளிலும் நாங்கள் சரியாக விளையாடவில்லை,” என்று அவர் சொன்னார்.

“டி20 உலகக் கிண்ணத்தில் எங்களின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதல் நாளில் சரியாக செயல்படவில்லை. இன்றைய ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபின் சரியாகப் பந்து வீசவில்லை. அதேபோல், பந்தடிப்பிலும் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் ,தோல்விக்கு ஒரு காரணத்தை மட்டும் கூற முடியாது. ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்,” என்றார் டிராவிட்.

“நான் பயிற்றுநராகத் தொடர்வேனா, இப்போது இருக்கும் வீரர்கள் 2027 உலகக் கிண்ணத் தொடரில் ஆடுவார்களா என நிறைய கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கெல்லாம் என்னால் இப்போது பதில் சொல்லவே முடியாது. ஒரு பெரிய போட்டியை இப்போதுதான் முடித்துவிட்டு வந்திருக்கிறேன்,” என்று அவர் சொன்னார்

“ரோகித் சர்மா அருமையான தலைவர். அவர் அணியின்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும் என ரோகித் எண்ணினார். அதையே அவர் செய்தார்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!