பிராக்: செக் குடியரசின் உள்ளூர் காற்பந்துக் குழுவான ‘டி ஜே ஸோகோல் உபோலாவி’ அந்நாட்டின் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது.
அதற்குக் காரணம் அந்த அணியின் கோல் கொண்டாட்டம்தான்.
கடந்த வார இறுதியில் உபோலாவி அணியும் லிபோசோவானி அணியும் விளையாடின.
லிபோசோவானி குழு 6-0 என்று முன்னிலை வகித்திருந்தது.
82ஆவது நிமிடத்தில் உபோலாவி அணி தனது முதல் கோலை அடித்தது.
அத்தருணத்தை, அக்குழுவின் 11 வீரர்களும் ஐந்து மாற்று வீரர்களும் மேற்சட்டையைக் கழற்றிக் கொண்டாடினர்.
அதனைக் கண்டிக்கும்விதமாக ஆட்ட நடுவர் 16 வீரர்களுக்கும் மஞ்சள் அட்டை காட்டினார்.
இச்சம்பவம் சமூக ஊடகத்தில் காட்டுத்தீப்போல் பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
உபோலாவி அணி ஆட்டத்தை 6-2 என்ற கோல் கணக்கில் தோற்றாலும் இணையவாசிகளின் மனங்களை வென்றது.