யுனைடெட்டை ஊதித் தள்ளிய சிட்டி

மான்செஸ்டர்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டை 3-0 எனும் கோல் கணக்கில் நசுக்கியது நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி.

சிட்டியின் இரண்டு கோல்களைப் போட்டார் நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர் எர்லிங் ஹாலண்ட். முதல் கோல் பெனால்டியில் விழுந்தது. ஃபில் ஃபோடன் குழுவின் மூன்றாவது கோலைப் போட்டார்.

யுனைடெட் கோல்காப்பாளர் ஆண்ட்ரே ஒனானா இல்லாதிருந்தால் கோல் எண்ணிக்கை எங்கோ சென்றிருக்கும். ஆட்டத்தில் சுமார் ஐந்து கோல் வாய்ப்புகளைத் தடுத்தார் ஒனானா.

யுனைடெட்டுக்கு மூச்சு விடக்கூட வாய்ப்பில்லாத அளவுக்கு சிறப்பாக ஆடியது சிட்டி. யுனைடெட்டின் மார்க்கஸ் ரே‌ஷ்ஃபர்ட், ஸ்காட் மெக்டோமினே இருவரும் கிடைத்த ஓரிரு வாய்ப்புகளையும் நழுவவிட்டனர்.

இத்தோல்வி, யுனைடெட் நிர்வாகியாகத் தான் எதிர்கொண்டிருக்கும் ஆக மோசமான நிகழ்வுகளில் ஒன்று என்றார் எரிக் டென் ஹாக்.

“ஒரே நகரைச் சேர்ந்த பரம வைரிகளிடம் இந்த வகையில் தோல்வியடைந்தது பெரும் வருத்தம் தரும் ஒன்றுதான். முற்பாதியில் எங்களிடம் நல்ல விளையாட்டு உத்திகள் இருந்தன, அவற்றை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வந்தோம். பெனால்டி வாய்ப்பு ஆட்டத்தின் போக்கை மாற்றியது,” என்று டென் ஹாக் கூறினார்.

இந்த லீக் பருவத்தில் யுனைடெட் இதுவரை ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்துவிட்டது. அதிகம் செலவு செய்து புதிய சில விளையாட்டாளர்களை வாங்கிய அக்குழு கோல் போடவே சிரமப்பட்டு வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!