வளர்ந்துவரும் நிறுவனங்கள் விருதளிப்பு விழா இம்முறை 17வது ஆண்டாக நடைபெற இருக்கிறது. விருதுகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள் ஜூன் 7.
சிங்கப்பூர், ஹாங்காங், இந்தோனீசியா, மலேசியா ஆகியவற்றைச் சேர்ந்த வளர்ந்துவரும் நிறுவனங்களை இந்த விருது அங்கீகரிக்கிறது.
விருதுகளை வெல்ல, தொழில்ரீதியில் முனைப்புடனும் புத்தாக்கமிக்கச் செயல்பாடுகளுடனும் மீள்திறன்மிக்கதாகவும் நிறுவனங்கள் இருக்க வேண்டும்.
இந்த விருதுகளை தி பிஸ்னஸ் டைம்ஸ் மற்றும் ஓசிபிசி வங்கி இணைந்து வழங்குகின்றன.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
விண்ணப்பம் செய்ய விரும்பும் நிறுவனங்கள் https://www.businesstimes.com.sg/events-awards/emerging-enterprise எனும் இணையப்பக்கத்துக்குச் சென்று கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.