பள்ளி நேரடி சேர்க்கை நடவடிக்கை மே 7 தொடங்குகிறது

உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகளுக்கான நேரடி சேர்க்கை மே 7ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரிக்கான முன்கூட்டிய சேர்க்கை முறையே மே 21, ஜூன் 3 ஆம் தேதிகளில் தொடங்குகிறது.

தேசிய தேர்வுகளில் மாணவர்கள் பெறும் தேர்ச்சிக்கு அப்பாற்பட்டு, ஆர்வம், திறன், ஆற்றல், திறமை ஆகியவற்றின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரியில் சேர நேரடி பள்ளி சேர்க்கை (டிஎஸ்ஏ) அனுமதிக்கிறது என்று கல்வி அமைச்சு மே 6ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

உயர்நிலைப் பள்ளிகளும் தொடக்கக் கல்லூரிகளும் தங்கள் மாணவர்களில் 20 விழுக்காடு வரை நேரடி சேர்க்கை மூலம் அனுமதிக்கலாம் என்று அமைச்சு குறிப்பிட்டது.

டிஎஸ்ஏ-வில் பங்கேற்கும் மாணவர்கள் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு அல்லது சாதாரண நிலை தேர்வுகளை எழுத வேண்டும்.

டிஎஸ்ஏ விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டால், விண்ணப்பித்த பள்ளிகள் மூலம் தெரிவிக்கப்படும். தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் அப்பள்ளிகளில் சேர்வது குறித்து முடிவு செய்ய வேண்டும். முடிவுசெய்யும் பட்சத்தில் குறிப்பிட்ட பள்ளியில் இடம் உத்தரவாதம் அளிக்கப்படும். பிஎஸ்எல்இ தேர்வில் அப்பள்ளியில் சேர்வதற்குத் தேவையான குறைந்தபட்ச புள்ளிகளைப் பெற்றிருப்பதும் முக்கியம்.

அதேபோல், தொடக்கக் கல்லூரிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களின் சாதாரண நிலை முடிவுகள் சேர்க்கைக்கான குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், இடம் உத்தரவாதம் அளிக்கப்படும்.

டிஎஸ்ஏ வாய்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், மாணவர்கள் எஸ்1 பள்ளிச் சேர்க்கை அல்லது கூட்டு மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளில் பங்கேற்க இயலாது. தேர்வு முடிவுகளைப் பெற்ற பிறகு வேறு பள்ளிக்கு மாறவும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தொடக்கப்பள்ளி மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் மே 7 காலை 11 மணி முதல் ஜூன் 3 பிற்பகல் 3 மணி வரை www.moe.gov.sg/dsa-sec வழியாக விண்ணப்பிக்கலாம்.

தொடக்கக் கல்லூரிக்கு விண்ணப்பிப்போர் www.moe.gov.sg/dsa-jc என்ற இணையத் தளத்தை அல்லது தேர்வு செய்யும் தொடக்கக் கல்லூரியின் இணையத்தளத்தைப் பார்க்கவும்.

சாதாரண நிலை, ஐடிஇ மாணவர்களுக்கான முன்கூட்டிய சேர்க்கை பயிற்சியின் (இஏஇ) கீழ், தேர்வு பெற்றவர்கள் தங்கள் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பு நிபந்தனையுடன் கூடிய இடத்தை பெறுவார்கள்.

பாடத் தேர்ச்சிக்கு அப்பால், ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்தை அவர்களின் திறன், ஆர்வத்தின் அடிப்படையில் தேர்வுசெய்ய இஏஇ ஒரு பாதையை வழங்குகிறது.

பலதுறைத் தொழிற்கல்லூரிக்கு முன்கூட்டிய சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்பும் இறுதியாண்டு ஐடிஇ மாணவர்கள் ஜூன் 6 முதல் 12 வரையிலும்; சாதாரண நிலை மாணவர்கள் ஜூன் 20 முதல் 26 வரையிலும் விண்ணப்பிக்கலாம். மேல்விவரங்களுக்கு காண்க: https://eae.polytechnic.edu.sg/

இச்சேர்க்கையில் தேர்வு பெறுவோர் இறுதித் தேர்வு முடிவுகளைப் பெறுவதற்கு முன்னர் நிபந்தனையுடன் கூடிய இடம் வழங்கப்படும். தேர்வு முடிவுகள் பலதுறைத் தொழிற்கல்லூரி பாடத்திற்கான குறைந்தபட்ச நுழைவுத் தேவைகளைப் பூர்த்தி செய்தால் இடம் உறுதியாகும்.

இஏஇ -வில் இடத்தை உறுதிப்படுத்தியர்கள் மற்ற பலதுறைத் தொழிற்கல்லூரி சேர்க்கை நடவடிக்கையில் பங்கேற்கவோ அல்லது அதே கல்லூரியில் வேறு படிப்புகளுக்கு மாறவோ முடியாது.

நைடெக், உயர் நைடெக் படிப்புகளில் முன்கூட்டியே சேர விரும்பும் வழக்கநிலை, சாதாரண நிலை மாணவர்களுக்கும் இதே நடைமுறை பொருந்தும். விண்ணப்ப காலம் மே 21 முதல் 28 வரை.

குறைந்தது இரண்டு ஆண்டுகள் வேலை அனுபவமுள்ள பெரியவர்களும் முன்கூட்டிய சேர்க்கை நடவடிக்கையில் பங்கேற்கலாம். ஜூன் 3 முதல் 30 வரை பலதுறைத் தொழிற்கல்லூரி அல்லது மே 21 முதல் 28 வரை ஐடிஇ-க்கு விண்ணப்பிக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!