மூன்று சுகாதாரப் பொருள்களை வாங்க வேண்டாம், அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களை சுகாதார அறிவியல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதில் ‘ஸ்டீராய்ட்ஸ்’ உள்ளிட்ட உத்தேச மருத்துவப் பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என அது தெரிவித்தது.
நேச்சுரல் ஹெர்ப்ஸ், ஸ்பெஷல் ஸ்கின் டிரீட்மெண்ட், லா மு காவோ மாத்திரைகள் ஆகியன அந்த சுகாதாரப் பொருள்கள்.
அவற்றில் ஸ்டீராய்ட்ஸ், நோய் எதிர்ப்பு மருந்து அமாக்ஸிஸிலின், வீக்கத்திற்கும் வலியைக்போக்கவும் பயன்படும் டிக்ளோ ஃபினேக் போன்ற பொருள்களும் லா மு காவோ மாத்திரைகளில் பாரசிட்டமல் கலந்துள்ளது என்றும் மே 3ஆம் தேதி ஆணையம் கூறியது.