விரும்பும் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப நிதி திட்டமிடுதல் அவசியம்.

நிதி இலக்குகளின் முன்னுரிமை

உங்கள் நிதி இலக்குகளைப் பட்டியலிடுவதன் மூலம் தொடங்கவும்

உங்கள் இலக்குகள் என்ன என்பதை அடையாளம் காண்பது முதல் படி. அடைய விரும்பும் இலக்குகளைப் பற்றி தெளிவற்ற யோசனை உங்களுக்கு இருக்கலாம். அதைச் செயல்படுத்த ஒரு திட்டத்தை வைப்பது கடினம்.

எனவே எல்லா இலக்குகளையும் குறித்துக்கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொண்டு, அவற்றை எழுதிக் கொள்ளலாம். 

இது நபருக்கு நபர் மாறுபடும் என்பதால், தனிப்பட்ட இலக்கு அடிப்படையில் நிதியை உருவாக்குவது முக்கியம். உங்கள் தேவைகளைக் கருத்தில் கொண்டு திட்டமிடுங்கள். திருமணம், வீடு புதுப்பித்தல், கல்விக்கான கடன்களைச் செலுத்துதல் போன்ற அவசர கால நிதியை உருவாக்குதல் இதில் உள்ளடங்கும். பிறகு எழுதிய இலக்குகளை அளவிடக் கூடியதாக மாற்ற வேண்டும்.

எடுத்துக்காட்டாக, “எனக்கு அவசர நிதி வேண்டும்” என்று சொன்னால் போதாது. அவசர நிதி என்றால் எவ்வளவு பணம் தேவை, அது எவ்வளவு நாள்களுக்குள் தேவை என்று குறிப்பிட வேண்டும்.

ஒவ்வோர் இலக்குக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் மதிப்பையும் அமைக்கவும். எடுத்துக்காட்டாக, ஒருவர் 40 வயதில் 4 மில்லியன் வெள்ளியுடன் ஓய்வு பெற விரும்பலாம். அல்லது இன்னொருவர் தனது $20,000 கல்விக் கடனை ஒரு வருடத்தில் செலுத்த விரும்பலாம்.

இதன் அடிப்படையில் கிடைக்கும் தகவலுக்கு ஏற்ப எவ்வளவு தேவைப்படும் என்பது பற்றிய விரிவான மதிப்பீடுகளை உருவாக்கவும் இது உதவுகிறது. 

முக்கியத்துவத்தின் அடிப்படையில் உங்கள் நிதி இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுப்பது

சில இலக்குகள் அவசியமானவை - மற்றவை ஆடம்பரத் தேவைகள். எனவே முதலில் கவனம் செலுத்த வேண்டியனவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது?

நிதித் திட்டமிடலில் ஐசனோவர் மேட்ரிக்ஸ் மாதிரியைப் பயன்படுத்தலாம்

ஐசனோவர் மேட்ரிக்ஸ் மாதிரி, நிதி சார்ந்த முடிவுகளை வழிநடத்தும் ஒரு கட்டமைப்பு இருக்கிறது.

நிதி இழப்பைத் தவிர்ப்பதும், அவசர இலக்குகளைக் கண்டறிவதும் முக்கியம். எனவே அவை  முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

உதாரணமாக, வேலையிலிருந்து ஓய்வுபெறும் நாள்களுக்கு ஓய்வுகால நிதி தேவைப்படும். மேலும், ஒரு புது வீடு வாங்குவது இலக்காக இருந்தால், அதை முதன்மைப்படுத்துவது சிறந்தது. 

நிதி இல்லாத சமயத்தில் முக்கியமில்லாத இலக்குகளுக்குச் சிறிது நேரம் காலம் கடத்தலாம். ஓர் ஆடம்பரமான திருமணம் அல்லது ஒரு நீண்ட ஓய்வுக்கால விடுப்பு - இவை இருந்தால் நன்று என்றபோதிலும் அவை விரைவில் நடக்கும் என்பதற்கில்லை. 

இலக்குகளைப் பட்டியலிடும்போது ​​​​அவற்றில் சில, முக்கியமானதல்ல என்பதை ஒருவர் உணரலாம். எனவே முடிந்த வரையில் முக்கியமானவற்றில் கவனம் செலுத்துவது அவசியம். 

எளிதில் முடிவெடுக்க உதவும் கருவியாகத் திகழ்கிறது இந்த ஐசனோவர் மேட்ரிக்ஸ் மாதிரி.

இலக்குகளை மதிப்பாய்வு செய்வது

சேமிப்புகளையும் முதலீடுகளையும் அவ்வப்போது வருடத்திற்கு ஓரிரு முறை மதிப்பாய்வு செய்யவும்.

மாறிவரும் வாழ்க்கை சூழல்களுக்கு ஏற்ப இலக்குகளை மறுபரிசீலனை செய்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க வேண்டும். இலக்குகளில் சிலவற்றை நீங்கள் தாமதப்படுத்த வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால், மனம் தளராமல் இருக்க வேண்டும். நிலையான முறையில் முக்கியமான முடிவுகளை நோக்கிச் செயல்படுவது சிறந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!