சிங்கப்பூரும் கனடாவும் அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்த முயற்சி

வாஷிங்டன்: சிங்கப்பூரும் கனடாவும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இணக்கம் கண்டுள்ளன.

மே 2ஆம் தேதி இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கை அதைத் தெரிவித்தது.

ஒத்துழைப்பை மேம்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ள துறைகளில் செயற்கை நுண்ணறிவு, உயிரியல் தொழில்நுட்பம், மின்னிலக்கத் தொழில்நுட்பம், பசுமைத் தொழில்நுட்பம் ஆகியவையும் அடங்கும்.

இருதரப்பு ஒத்துழைப்பு மூலம் மேம்பட்ட பயனை அடைவது தொடர்பில் ஆய்வுசெய்ய ஆர்வமுடன் இருப்பதாக அமைச்சர் கான் கூறினார்.

ஓட்டாவா நகரில் அவர், கனடாவின் ஏற்றுமதி வளர்ச்சி, அனைத்துலக வர்த்தக, பொருளியல் மேம்பாட்டு அமைச்சர் மேரி இங்கைச் சந்தித்துப் பேசினார்.

இரு நாடுகளும் உலகளாவிய புத்தாக்கக் குறியீட்டில் முதல் 15 நிலைகளுக்குள் இடம்பிடித்திருப்பதைச் சுட்டிய திரு கான், சிங்கப்பூரும் கனடாவும் ஏற்கெனவே புத்தாக்க ஒத்துழைப்பு தொடர்பில் அணுக்கமாகப் பணியாற்றி வருவதாகக் கூறினார்.

இரு நாட்டு நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்த வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கக் கூடுதலாகச் செயலாற்றலாம் என்று திரு கான் கூறினார்.

கூட்டாக ஆய்வு மேற்கொள்ளுதல், திறனாளர் பரிமாற்றம் போன்றவை தொடர்பில் இரு தரப்பு ஆய்வு நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்புகளை உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

பசுமைப் பொருளியல் தொடர்பில் இரு நாட்டு அதிகாரிகளும் ஆக்ககரமான கலந்துரையாடல்களை நிகழ்த்தியதாக அமைச்சர் கான் குறிப்பிட்டார்.

பசுமைப் பொருளியல் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு தொடர்பில் அமைச்சர் கானும் கனடிய அமைச்சர் இங்கும் அணுக்கமாகப் பணியாற்றத் திட்டமிட்டிருப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது.

மேம்பட்ட ஆய்வு முடிவுகளை வர்த்தக ரீதியாகச் செயல்படுத்த இந்த ஒத்துழைப்பு உதவும் என்று கூறப்பட்டது.

நான்கு கொள்கைகளின் அடிப்படையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

முதல் கொள்கை, பொருளியல் வளர்ச்சி, போட்டித்தன்மை, வளப்பம் ஆகியவற்றைப் பேணுவதற்கு அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவை முக்கியப் பங்கு வகிப்பதை இரு நாடுகளும் அங்கீகரித்தல்.

இரண்டாவது, ஆய்வு, மேம்பாடு, புத்தாக்கம் ஆகியவற்றில் இரு நாடுகளும் உலகளாவிய நிலையில் முன்னிலை வகிப்பதை உறுதிசெய்தல்.

மூன்றாவது, அனைத்துலக ஒத்துழைப்பு கனடா, சிங்கப்பூர் என இரு நாட்டு ஆய்வாளர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் பலனளிக்கும் வகையில் இருப்பதை உறுதிசெய்தல்.

இறுதியாக, உலகளாவிய புத்தாக்கப் பொருளியலில் வெற்றிபெற, இரு நாட்டுத் திறன்களை வலுப்படுத்துதல்.

சிங்கப்பூரும் கனடாவும் அனைத்துலகத் தளங்களில் இயல்பான பங்காளித்துவ நாடுகளாக விளங்குவதாகத் திரு கான் குறிப்பிட்டார். சிங்கப்பூருக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகம் 2022ஆம் ஆண்டு $7.5 பில்லியனாக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!