வெளிநாட்டு ஊழியர்களுடன் தொழிலாளர் தினக் கொண்டாட்டம்

மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஷார்ட் ஸ்திரீட் தமிழ் மெதடிஸ்ட் தேவாலயத்தைச் சார்ந்த ‘இந்திய நண்பர்கள் ஐக்கியம்’ அமைப்பு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு சிறப்பு விளையாட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சி உட்லண்ட்ஸ் கிரைஸ்ட் சர்ச் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அந்நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் பங்கு பெற்றனர். அந்நிகழ்ச்சி “வண்ணமயமான வாழ்க்கை” என்ற கருவை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது. அவர்களுக்கென்று பிரத்தியேகமாக கயிறு இழுத்தல், ஏழு கல் ஆட்டம் போன்ற இந்தியப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளையும், ஓட்டப்பந்தயம், பூப்பந்தாட்டம், கைப்பந்து போன்ற வெளிப்புறப் போட்டிகளையும் சதுரங்கம், கேரம் போன்ற உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஊழியர்கள் அனைவரும் தங்கள் தனிமை, கவலை, கஷ்டங்களை மறந்து, அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அத்தனை விளையாட்டுகளிலும் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

மேலும், “வெளிநாட்டு வாழ்க்கை மனமகிழ்ச்சியைத் தருகிறதா? அல்லது மன உளைச்சலைத் தருகிறதா? என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற பட்டிமன்றம் நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது. பட்டிமன்றத்தில் பங்கு பெற்று பேசிய ஊழியர்கள் தங்கள் சொந்த அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர். பட்டிமன்றம் கேட்பவர்களைச் சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்தது.

அதோடு, வந்திருந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு தொலைபேசியின் மூலம் ஏற்படும் பண ஏமாற்று மற்றும் சூழ்ச்சியிலிருந்து எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் டிபிஎஸ் வங்கி ஊழியர்கள் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அது வந்திருந்த அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலையில் வடையும் தேநீரும் பரிமாறப்பட்டன. மேலும் அனைவருக்கும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டதோடு, 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

அனைத்து தங்குவிடுதிகளிலிருந்தும் ஊழியர்களுக்கு இலவச பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய விளையாட்டுப் போட்டிகள் மாலை 5 மணிக்கு
இனிதே நிறைவுற்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!