நான்கு ஆண்டுகளுக்குப்பின் பொதுமக்களை மகிழ்வித்த விமானக் காட்சி 2024

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 24, 25ஆம் தேதிகளில் பொதுமக்களை மகிழ்வித்தது சிங்கப்பூர் விமானக் காட்சி 2024.

இரு நாள்களிலும் எதிர்பார்த்ததைப் போலவே 60,000 பேர் வந்ததாகவும் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்பனையானதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

பிப்ரவரி 24ஆம் தேதி காலை 7.30 மணி முதல் பிப்ரவரி 25ஆம் தேதி மாலை 6 மணி வரை பார்வையாளர் கூட்டம் ஓயவில்லை.

சிங்கப்பூர் விமானக் காட்சிக்கான இலவசப் பேருந்தை எடுக்க எக்ஸ்போ மண்டபம் 5ல் அலைமோதிய கூட்டம். படம்: ரவி சிங்காரம்
காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க, வர்த்தக நாள்களைவிட கூடுதல் இலவசப் பேருந்துகள் விடப்பட்டன. படம்: ரவி சிங்காரம்

இவ்வாண்டு சிங்கப்பூர் விமானக் காட்சியின் வான் அங்கங்களில் வரலாற்றிலேயே ஆக அதிகமான வெளிநாட்டு விமானப் படைகள் பங்குபெற்றன.

சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்திரேலியா, கொரியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளின் ஆகாயப் படைகள் வான் சாகசங்களைப் படைத்தன. ‘ஏர்பஸ் ஏ350-1000’ மற்றும் அமெரிக்க, சீன விமானங்களும் பறந்தன.

சிங்கப்பூர் ஆகாயப் படையின் எஃப்-15எஸ்ஜி, ஏஹெச்-64டி ரக விமானங்கள், நான்கு ஒருங்கிணைந்த சாகசங்களோடு மொத்தம் 12 சாகசங்களைப் படைத்து மக்களை மகிழ்வித்தன.

நிலத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பன்னாட்டு விமானங்களைக் கண்டு, அவற்றில் ஏறி அமர்ந்து புகைப்படம் எடுத்து பார்வையாளர் குடும்பங்கள் மகிழ்ந்தன.

சிங்கப்பூர் விமானக் காட்சிக்காகத் தன் பெற்றோரை இந்தியாவிலிருந்து அழைத்து வந்திருந்த பாலமுருகன், 34, “நான் பெங்களூரில் விமானக் காட்சி கண்டிருக்கிறேன். அதனினும் நன்றாக இருந்தது இன்றைய காட்சி,” எனக் கூறினார்.

கண்கவர் சாகசங்களைப் படைத்த இந்திய விமானப் படை சாராங் அணியினரோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்த கீர்த்தி ராஜன், 26 (இடமிருந்து இரண்டாவது). படம்: கீர்த்தி ராஜன்

“கண்ணுக்கு விருந்தளிக்கும் விதமாக விமானிகள் துணிச்சலோடு ஒருங்கிணைந்த வான் சாகசங்களைப் படைத்தனர். கடும் வெயிலிலும் சிங்கப்பூர் ஆகாயப் படையினர் விமானங்களைப் பற்றிப் பொறுமையாக விவரித்தனர்.

“உள்ளரங்கிலும், ‘எஸ்டி இஞ்சினியரிங்’, இந்தியாவின் ‘பிரமோஸ்’ போன்ற நிறுவனங்களின் தொழில்நுட்பங்கள் என்னைக் கவர்ந்தன,” என்றார் கீர்த்தி ராஜன், 26.

பார்வையாளர் குடும்பங்கள் பன்னாட்டு ஆகாயப் படையினருடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தன. படம்: ரவி சிங்காரம்
‘எஸ்டி என்ஜினியரிங் ஏர்ஃபிஷ்’, நீரிலிருந்தே மேலெழவும் கீழிறங்கவும் நீர்மீது பறக்கவும் செய்யும். துருக்கிய நிறுவனம் பத்து ஏர்ஃபிஷ்களை வாங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. படம்: ரவி சிங்காரம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!