1.6 மி. முதிய சிங்கப்பூரர்களுக்குப் பலனளிக்கும் $8.2 பில்லியன் ‘மாஜுலா தொகுப்பு’

‘மாஜுலா தொகுப்பு’ மூலம் ஐம்பது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய 1.6 மில்லியன் சிங்கப்பூரர்கள் பயனடையவிருக்கின்றனர். இது, அவர்களுடைய ஓய்வு கால தொகையை மேம்படுத்த உதவுகிறது.

2023 தேசிய நாள் பேரணியில் மாஜுலா தொகுப்பு பற்றி அறிவிக்கப்பட்டது. அதன் மொத்த செலவினம் $8.2 பில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐம்பது வயதுகளில் உள்ளவர்கள், 60 வயதுகளின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளவர்கள், 1950க்கும் 1959க்கும் இடையில் பிறந்த மெர்டெக்கா தலைமுறையினர், 1949 அல்லது அதற்கு முன்பு பிறந்த முன்னோடித் தலைமுறையினர் ஆகியோரை இந்தத் திட்டம் உள்ளடக்கியிருக்கிறது.

இவர்களுடைய பங்களிப்பை கௌரவப்படுத்தும் அதே வேளையில் எதிர்கால தலைமுறையினர் மீது சுமையை ஏற்றாமல் 7.5 பில்லியன் வெள்ளி ‘மாஜுலா தொகுப்பு’ என்ற புதிய நிதிக்கு ஒதுக்கப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின்போது அறிவித்தார்.

இது, முதலீட்டு வருமான நிதியைச் சேர்த்து வாழ்நாள் செலவின தொகுப்புக்கு போதுமானது என்று அவர் கூறினார்.

1973 அல்லது அதற்கு முன்பு பிறந்த அனைத்து சிங்கப்பூரர்களும் மாஜுலா தொகுப்பில் குறைந்தது ஏதாவது ஒரு பிரிவின்கீழ் பலனடைவார்கள் என்றார் அவர்.

மூன்று பகுதிகளைக் கொண்ட தொகுப்புக்கு தகுதி பெறும் விதிமுறை விவரங்கள் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியிடப்பட்டது.

மூன்று பிரிவுகளில் முதலாவது, வருமானம் ஈட்டி, சேமிக்கும் போனஸ் (இஎஸ்பி) திட்டமாகும்.

இதன் மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கு ஆண்டுதோறும் $400க்கும் $1,000க்கும் இடையே மசேநி போனஸ் வழங்கப்படும்.

இந்த போனஸ் நேரடியாக அவர்களுடைய மத்திய சேம நிதி கணக்கில் வரவு வைக்கப்படும். அவர்களது ஊழியர், முதலாளி சந்தா தொகைகளுக்கு மேலாக இது வழங்கப்படும்.

ஆண்டுதோறும் இதன் தகுதி விதிமுறைகள் குறித்து பரிசீலிக்கப்படும். இது, மாத சராசரி வருமானத்தின் அடிப்படையில் பல அடுக்குகளைக் கொண்டிருக்கும்.

இதற்குத் தகுதி பெற, பகுதி அல்லது முழு நேரமாக ஊழியர் அணியில் தொடர்ந்து நீடிப்பது அவசியம். மாத சராசரி வருமானம் $500க்கும் $6,000க்கும் இடைப்பட்டிருக்க வேண்டும்.

முதல் வருடாந்தர இஎஸ்பி, தகுதி பெற்றவர்களின் மத்திய சேம நிதி ஓய்வுகால கணக்கு அல்லது சிறப்பு கணக்கில் 2025 மார்ச்சில் வரவு வைக்கப்படும்.

முதிய சிங்கப்பூரர்களை மேலும் ஓய்வுக்குத் தயாராக்கும் வகையில் இந்தத் தொகுப்பில் ஓய்வுகால சேமிப்பு போனசும் (ஆர்எஸ்பி) உள்ளடங்கியிருக்கும். மசேநி ஓய்வுகால அடிப்படை தொகையை அடைய முடியாதவர்களுக்கு இது கைகொடுக்கும்.

2022 டிசம்பர் 31 நிலவரப்படி மசேநி அடிப்படை ஓய்வுகால தொகை 99,400 வெள்ளியாகும். இதற்கும் குறைவான தொகை உள்ளவர்களுக்கு ஒரு முறை போனஸ் தொகை பெறுவார்கள்.

டிசம்பர் 2024ல் மசேநி ஓய்வுகால கணக்கு அல்லது சிறப்பு கணக்கில் $1,000 முதல் $1,500 வரை வரவு வைக்கப்படுவதை இவர்கள் எதிர்பார்க்கலாம்.

இரு போனஸ்களும் ஆண்டு மதிப்பு $25,000 அல்லது அதற்கு குறைவான வீட்டில் வசிப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும்.

வருமானம் மற்றும் இதர தகுதி விதிமுறைகளைக் கொண்ட இஎஸ்பி, ஆர்எஸ்பியைப் போன்று அல்லாமல் மூன்றாவது பிரிவு ஒரு முறை வழங்கப்படும் மெடிசேவ் போனசாகும். வயது தகுதியை பூர்த்தி செய்யும் அனைத்து முதியவர்களுக்கும் இது வழங்கப்படும்.

“வசதி குறைந்த இளம் முதியவர்களுக்கு உயர் வரம்பான $1,500 வழங்கப்படும், மற்ற அனைத்து மூத்தவர்களுக்கும் $750 வழங்கப்படும்,” என்று துணைப் பிரதமர் வோங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!