இந்தியப் பயணிகளை வரவேற்கும் முனைப்பில் தென்கிழக்கு ஆசியா

புதுடெல்லி: உலக நாடுகளுக்கிடையே இந்தியாவில் அதிவேக பொருளியல் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மற்ற நாடுகளுடன் போட்டி போடும் வகையில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்தியப் பயணிகளை வரவேற்கும் முனைப்பில் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தியப் பயணிகளுக்கு விசா இல்லா அனுமதியை மலேசியாவும் தாய்லாந்தும் அறிமுகப்படுத்தி உள்ளன.

இதற்கிடையே சிங்கப்பூர், பெருநகரங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் இருந்து வர விரும்பும் பெரியவர்களையும் குடும்பங்களையும் வரவேற்க எண்ணம் கொண்டுள்ளது.

சிங்கப்பூர் வர விரும்பும் இந்தியர்கள் விசா பெற வேண்டும். எனினும், விண்ணப்பம் செய்த மூன்று நாள்களுக்குள் விசா அனுமதி கிடைத்துவிடும்.

இந்தியாவின் வாரணாசி நகரில் ஹோட்டல் உரிமையாளரான பிரதீப் நாராயண் சிங் என்பவர் தமது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறார். அதற்கு ஒரே காரணம், அவரது ஆறு வயது பேரன் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தை காண வேண்டும் என விரும்புவதால்.

திரு சிங் சிங்கப்பூர் வேலை நிமித்தமாக சிங்கப்பூர் வந்துள்ளார். எனினும், அவருக்கு லிட்டில் இந்தியா பகுதியைத் தவிர மற்ற இடங்களைக் கண்டு களிக்க நேரம் கிடைக்கவில்லை.

“எப்படியோ எனது பேரன் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் பற்றி அறிந்துகொண்டு அதைப் பார்க்க சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்கிறான்,” என்று தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, துபாய், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு விடுமுறையைக் கழிக்க சென்றுள்ள திரு சிங் கூறினார்.

“ஆதலால், குடும்பத்துடன் ஏன் அங்கு செல்லக்கூடாது என நான் யோசித்தேன். மார்ச் மாதத்துக்குப் பின் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளோன்,” என்று திரு சிங் கூறினார்.

இந்தியாவில் பெரு நகரங்கள் அல்லாத மற்ற நகரங்களே பொருளியல் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருபவை. அங்கிருந்துதான் திரு சிங் குடும்பத்தாரைப் போல உள்ள மற்றவர்களை பயணிகளாக ஈர்க்க சிங்கப்பூர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தியாவில் வளர்ந்து வரும் மத்திய வருமானக் குடும்பங்களும் அவர்களிடம் அதிகரித்து வரும் பொருளாதார வசதியும் வெளிநாடுகளைச் சுற்றிப் பார்க்கும் அனுபவங்களைப் பெறும் தீரா ஆர்வமுமே என்று சொல்லப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!